மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Sunday, December 26, 2010

தாயின் தாயவள்

அவதானிக்க 

  மேலே உள்ள செய்தி படத்திற்கு, தினமலர் நாளிதழ், மதுரை பதிப்பிற்கு விசுவாசம்.

தாயின் தாய் 

தாயின் தாய்
தாய்க்குத் தலை மகள்
தாயின் தாயவள்
தலைமுறை ஐந்து கண்டவள்

தரணி சுற்றி வந்தவள்
தன்னிகரற்று வாழ்ந்தவள்

தன்நெஞ்சு தளராதவள்
தவறிய போது தவறியவள்

. . .

செய்தியறிந்தேன் எம் குரல்
செவிமடுக்க இயலா தூரம் சென்றதை

செய்தொழில் செக்காய் இழுக்க . . . உன்னுடல்
செல்லும் பாதையிலும் . . ..
தொடர்ந்து செல்லமுடியாமல்

. . .

செலவழித்த பின்னுள்ள
சில மணித்துளிகள்
சீராட்டி வளர்த்த ஞாபகம்
சில . . .

ஒரு சேர ஒன்றாய் அமர்ந்த
ஒரு நினைவு

ஒன்பது குழந்தைகளின்
வாரிசுகளை
வாரியணைத்து
வாழ்த்திய தருணங்கள்
பல . . .

ஏனோ ?
இருக்கும் பொழுது
இந்த நினைவுகள்
எங்கேயோ ஒளிந்திருப்பது ?

புரியாத வாழ்க்கை
சுழற்ச்சியில்
புரிபடாமலேயே
நகரும் நாட்களோடு . . .

என்ன இருக்கிறது
என்று தவறாமால்
கேட்கப் பழகி,
என்ன வேண்டும்மென்று
இனி எந்த காலத்திலும் கேட்க முடியாமல்

ஒவ்வொன்றாய்,
உரித்து உரித்துப் பார்க்கின்,
சுடும் உண்மை,

இத்தனையும்
நித்திரை எனும் திரை மறைக்க,
நிகழ்காலத்தின்
இன்னுமொரு நீண்ட பயணம் . . .

இனிமேல் எப்பொழுதாவது
இடிபாடுகளின்
இடைப்பட்ட இதயத்தின் இடத்தில்
இடமிருந்தால் இனிய காலம்
இருநொடியோ இருபது நிமிடமோ
இரண்டு மணி நேரமோ
இரு நாட்களோ
தெரியவில்லை
இனி எப்பொழுதென்று .. .

ஆகச் சிறந்தவனா ?
அளவற்ற ஆற்றல் உடையோனா ?
அன்றாட அகப்படலில் . . .
அடுத்த காலத்திற்காக என்று
அலையும் பொழுதில்
அற்பனாய் . . .
அறிந்த வார்த்தைகளை
அடுக்கி வைத்து
அரும்பொருளை அடிதொழுகின்றேன்
அறம்செய்து ஆற்றல் செய்து
அருள்வளர்க்க
ஆசிர்வதிப்பீர் . . .

ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்ரத்தில் இங்கே 

Wednesday, December 8, 2010

புதிய ஆண்டு : நமக்குமா ?

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ௧௬ தேதி, பின்னிரவும் இருள் விலகா நாள் முடியும் நேரத்தில் 'பெருங்கூச்சல்களுடன்' புதிய ஆண்டு பிறந்து விட்டது என்று ஒலி பெருக்கியில் அலறும் பொழுது, பல முறை எதற்கு நமக்கும் இந்த சம்பந்தமில்லாத ஒரு நாளுக்கும் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று கேள்வி எழுந்ததுண்டு,

வயது வளர வளர, கூச்சலிடுபவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது,

கடந்த சில வருடங்களாக, 'கல் தோன்றி முன்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி' என்பது  'குடி' கொண்ட கோமான்களால், கற்காலத்திர்க்கே அழைத்தும் செல்லும் விதமாக மார்கழி ௧௬ மற்றும் ௧௭ அதிகாலை உள்ளது, கடந்த ஆண்டு தவறிய மது வகை இம்முறையாவது மார்கழி ௧௬ ல் குடித்தே தீரவேண்டும் என்று குடியானவர்களின் நோக்கமாக உள்ளது, அது குடிமக்கள் பிரச்சனை.

கிரிகோரியன் நாட்காட்டிப் படி நாட்களை கூட்டி குறைத்து கழித்து, மேலை நாட்டினர் அவர்களின் குளிர் காலம், பனி பொழியும் மாதம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, மார்கழி ௧௦ அவர்களின் பண்டிகை முடிந்தவுடன் மார்கழி பதினாறாம் தேடி ஆண்டின் புதிய நாளாக அறிவித்திருக்கிறார்கள்,

அது தான் நானூறு வருடத்திருக்கு மேல் அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து விட்டோமே, இன்னும் ஏன் நம்மால் நமக்கென்று இருக்கும் புதிய ஆண்டு கணக்கினை அறிய தேடிக்கொண்டிருந்த போது சில வருடங்களுக்கு முன் வந்த மின்னஞ்சல் நினைவுக்கு வந்தது.

அப்படங்களை, இங்கு பதிவிட்டிருக்கின்றேன், இப்படத்தினை உருவாக்கியது நானல்ல, ஆனால் பாரத தீபகற்ப பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளிலும், தெற்காசிய நாடுகளிலும் புதிய ஆண்டு ஏன் சித்திரை மாதத்தையொட்டி வருகிறது என்பதற்கான விளக்கம் உள்ளது:




















மேற்சொன்ன விளக்கம் விஞ்ஞான பூர்வமாக உள்ளது,

இதனைப் அறிந்த பின்பும், மார்கழி ௧௬ மற்றும் ௧௭ தேதிகளில் கூச்சல் தொடர்வதோ இல்லை நிறுத்துவதோ தனி மனித உரிமை,

இப்படங்களின் ஒருங்கிணைந்த இலகு படிவ வடிவ (PDF - Portable Document  Format) கோப்பை (File) உருவாக்கியுள்ளேன், பின்னூட்டத்தில் கூகிள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் அனுப்புகின்றேன்.

இப்பதிவினை பலருக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன், அதிலிருந்து பெற்ற ஒரு கருத்துக் கோப்பு (கடிதம்), கீழே கொடுத்துள்ளேன்.

2011/1/3 sivaji sivaji.E.Raman., . . . . @gmail.com>
அன்புடைய நண்பர்,
திரு . ஸுரேஷ்குமார் மார்கண்டேயன் அவர்களுக்கு,

                    நான் எனது நண்பர் தங்கள் வீட்டில் வாடகைக்கு குடிஇருக்கும்
திரு. ராம்குமார்,அவர்கள் மூலமாக எனது அறிமுக வணக்கத்தை  தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது நண்பர் திரு. ராம்குமார், தங்களுடைய மின் அஞ்சலை படித்துவிட்டு எனக்கும் பரிந்துரை செய்தார், நானும் ஏனோ தானோ என்றுதான் படித்தேன். (http://markandaysureshkumar.blogspot.com/2010/12/blog-post.html )

ஆனால், அதில் இருந்த கருத்துகள் வியபூட்டுவதகவும், வினா  கொக்கிகள் போடுவதாகவும், இருந்தது கண்டு வியந்தேன். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை புது நோக்கோடு எண்ணிட வைத்தது.

மதுரை மனமும், தமிழர், சௌராஷ்ட்ரம்  மற்றும் இந்தியர் பழைமை, பெருமைகளையும், விளக்கி வியப்டைய செய்து விட்டீர்கள். படமும், கருதும் பலத்த சிந்தனையை தூண்டிவிட்டது.

நீங்கள் உங்கள் பாட்டிக்கு, விடுத்துள்ள இரங்கல் கவிதையும் ,
தமிழ் மணம் உடையதாகவும் , பிறர் மணம் தொடுவதாகவும், உள்ளது.

இப்படிக்கு,
E . சிவராமன்
மதுரை-1
வாழ்க வையம் ! வளர்க இந்தியர் தம்பெருமை !

- - - - - - 

திரு. சிவராமன் அவர்களுக்கு,

பலருக்கு மின்னஞ்சல் அனுப்பியதில், பார்வை மட்டும்மல்லாது, தங்களின் பரந்த, படர்ந்த சிந்தனைகளை மின்னஞ்சல் மூலம் படிக்கும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி,

நம் பாரம்பரியமே, பன்முக நோக்கில், பல்வேறு கருத்துக்களை ஆய்ந்து அறிந்துகொள்ள வழிவகை உள்ளது தான்,

நடுவில் ஏற்பட்ட முரண்பாடுகள், முடிந்த அளவு பிரிவினை ஏற்படுத்திவிட்டது,

போதாகுறைக்கு,

நானூறுக்கு மேற்பட்ட ஆண்டின் அடிமை வாழ்வின் ருசி, நம்மை சிந்திக்க விடாமலேயே செய்கிறது,

நம் அடிமனதில், இருந்த பாரம்பரிய வேரினை ஆங்கிலேயர், நம்முடையது எதுவுமே சிறந்ததில்லை என்ற சிந்தனையை புகுத்தி அறுத்தெறிந்துவிட்டனர் ,

விளைவு: நம் கண்முன் இருக்கும் நல்ல விஷயங்கள் கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை,

'என்னத்தான் சொல்லு பிரிட்டிஷ் காரேன் காலத்துல கூட சொகமா தான் இருந்தோம்' . . .

போன்ற அங்கலாய்ப்புகள் அழியாமல் தொடர்கிறது,

அவ்வளவே,

இது ஒரு சிறு முயர்ச்சி,

வாழ்த்துகளுடன்,
மார்கண்டேயன்.
- - - - - -

Sunday, November 28, 2010

உ(து)யர வாழ்க்கை


 இனி உயரப் போறவைகளுக்கெல்லாம் . .
ஊட்டம் கொடுப்பதற்கு
தான் உயரத்தில் நாங்கள் . . .


உயர்வை காண முடியவில்லை
என்றழுபவர் மத்தியில்
உயரங்கள் மட்டுமே எங்கள் உயிர்க்கான வழி
எங்கள் உழைப்பின்
எழுத்துக்கள் எடுத்தெறியப்பட்டு
உயரங்கள் அழகூட்டப்படும்


உறங்கும் போது போனாலென்ன
உயரத்திலிருந்து போனாலென்ன
சிந்தனைகளிலும் உயர்ந்து தான்


உயிர்போன பின்
உண்டி உறைவிடம் ஊன்(உடல்) அனுப்ப
எஞ்சியவற்றை உறையில் அனுப்பும் உண்மை


உயரங்கள் மாறிக்கொண்டிருக்கும்
உயிர்க்கான உத்தரவாதம்
மட்டும் எள்ளளவும் மாறாமல் 

பயமில்லையா ? யார் சொன்னது
எங்கோ ஒரு தேசத்தில், உறவுகள் உயிரோடு இருக்கவேண்டுமே,
என்ற பயம் தான், எப்பொழுதும் . . .


 எப்பொழுதாவது உயரத்தில்
உள்ளவர் கணக்கு உதைக்கும்
உச்சி வெயிலில் கண்ணீர் உறைந்து போயிருக்கும் 


உயர்ந்த பணி
முடித்த தருணத்தில்
விண்ணுலகம் உயர்ந்தவன் கணக்கும் உறைக்குள் 
உயரம் உருப்பெறும் போது
உள்ளே செல்ல
அனுமதி ஏது ? 


எங்கோ ஓரிடத்தில்
எதுவோ சரிசெய்ய
ஊஞ்சலாடுவதோடு உறவு முடிந்துவிடும் 

உடலின் உணர்வுகளும் உபாதைகளும்
நீர்த்துபோயினும்
வயிற்றிற்கு மட்டும் அவ்வப்போது 

உயரம் தாண்டுதலில்
உயிர் மிச்சமிருந்தால் . . . ?!!!
ஊருக்கு சென்று . . . 

முதலில் இந்தக் கவிதை எழுதுவதற்கு கருவமைத்த திரு. ரிஷான் ஷெரிப் அவர்களின் பதிவிற்கும், மிக அரிய படங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்,

நான் வார்த்த வார்த்தைகளை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.

என்று இந்தப் படங்கள் கண்டேனோ, அன்றே, அர்த்தமில்லாத புலம்பல்கள் அதிகம் வருவதில்லை.

இக்கவிதை, எங்கோ பிறந்து வயிறுக்காக வானம் சுடும் வலிகளுடன் வாடும் மனித உறவுகளுக்கு சமர்ப்பணம்,

ஐயன்மீர், வணங்குகின்றேன் உங்களின் உழைப்பை.

திரு. சிவராமனின் இரண்டாவது மின்னஞ்சலையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

2011/1/5 sivaji sivaji.E.Raman., <. . . . @gmail.com>
அன்பு நண்பருக்கு வணக்கம் ,
எப்போதாவது நேரம் இருக்கிறது அப்போதெல்லாம் , வலைகளில் அலைகிறேன் , மிகப்பெரிய கடலுக்குள் முத்துகள் எங்காவது தான் இருக்கிறது. அது போல வலை கடலுக்கு உள்ளேயும் வேண்டாத விஷ மீன்கள் வண்ண ஜாலம் காட்டி அலைவது போல வேண்டாத விஷயங்கள் தான் அதிகம் உள்ளது .  வேண்டிய  விசயங்களை தேடிபிடிபதும் , பிடித்த
விசயங்களை முழுதும் படிப்பதும் , நேரம் சரியாகப் போய்விடுகிறது .
ஆனால் , அந்த விசயங்களை தேடிப்பிடித்து நமக்கும் படிக்க அளிபவர்களை, பாரட்ட கூட வேண்டாம் , ஆனால் படித்ததற்கு சாட்சியாக , அவர்களுக்கு
நன்றி தெரிவிப்பதும் அவசியம். அதையாவது செய்வது அவர்களை கௌரவிக்கும் , நான் தங்கள்  உ(து)யர வாழ்க்கை என்ற கவிதையைப் படித்தேன்  , வெளிநாடுக் கட்டங்களின் உயரத்தை மட்டுமே பார்த்த நான் இன்று தான் உண்மையையும் பார்த்தேன் நடுங்க வைக்கும் உயரத்தில் தம்மை நம்பி இருப்பவர்களுக்காக நரகத்தில்  (நான் இன்றுவரை வெளிநாட்டின் நல்ல நகரத்தில் தான் வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் இருப்பதாக  எண்ணினேன் அது அந்த கவிதையின் உயரத்திலும் , உண்ணத்திலும் , உடைந்து போனது .)
வாழ்பவர்களின் உயிர் என்கண் முன்னே உசலடுகிறது . ஆனால் அவர்கள் வாழவேண்டும் பல ஆண்டு .
நன்றி ! வணக்கம் !
நட்புடன் , E . சிவராமன் ,

- - - - - -


அன்பின் சிவராமன்,

உங்கள் எண்ணங்களுக்கு என் வந்தனங்கள்,

வருகைக்கும், வார்ப்பிர்க்கும் மிக்க நன்றி,

வெளிநாடு என்பது ஒரு வெளிப்புற மாயையே,

அங்கு வாழும் ஒவ்வொரும் கணமும், நீங்கள் அந்நிய நாட்டவர் என்பது, ஏதாவது ஒரு வகையில் அறிவிக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருக்கும்,
இதில், பணக் கஷ்டமும் சேர்ந்தால்:

அரேபியா அனுபவங்களை திரு. சிவா, இங்கு பகிர்ந்துள்ளார், இத்தனைக்கும் அவர் நல்ல பதவியில் பணி புரிந்தவர், அவருடைய அனுபவமே இப்படி என்றால்,

கூலி வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆட்களின் நிலையை, திரு. செந்தில் இங்கு செதுக்கியுள்ளார்,

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவுகள்,

தொடருங்கள், உங்கள் பதிவுலகின் பயணத்தை, பல தகவல்கள் அறிந்துகொள்ளலாம்,

மகிழ்வுடன்,
மார்கண்டேயன் 
         

Saturday, November 20, 2010

பிரியாத பிரிவுகள்

பிரிந்தவுடன் கலந்து
பிறந்து பின்
பிறப்பில் பிரிக்கும் பிரிவு

பின் பிம்பங்களாய்
பிடித்துக் கொடுக்கப்பட்டு
பிரிவுகள் பலவாய் பிறந்து

பிரிவிற்கான முதலீடை பணத்தால் செய்ய
பிரித்தாளும் ருசி கண்டு
பிறதொரு காரணிகளாய் சாதி, மதம் கை கொடுக்க

பிரித்துப் பார்த்து, பிரித்துப் பார்த்து
பிரிவுகளைக் கூட்டி
பிரிக்கப்பட்டவைகளில் ஒதுங்கி

பிரிந்த சிலவற்றில் சேர்ந்து
பிரிவென்ற சொல்லை மறைத்து
பிரியவில்லை என்ற பிரிய பூச்சு கொடுத்து

பிரிவிலும் மகிழ்ந்து
பிரிவுகள் பலவாய் பெருக்கி
பிரிந்த பிரிவுகள் சில சேர்த்து

பிரிவிலும் பிளவாக்கி
பிரிந்து நின்று, பிறப்பறுக்கும் பிரிவுணர்தவுடன்
பிரிவின் வலி அறிந்து

பிரிவறுத்த பின்னொரு நாளில் மனிதம் பிறக்க
பிரிவில்லையென்று பிதற்ற
பிரித்தவைகளைத் தேடியலைய . . .

பிரிந்திரிந்தது பிரித்தவரின் உடல் . . .
பிரிந்த பிண்டத்தை கண்டு . . .
பிதற்றியது பிரியப்போகும் பிணம்

பிரிவில் வாழ வழி கண்ட
பிணங்கள் சில
பிரிவுகளோடு பிரியாமல், இன்னும் . . .

இக்கவிதையை 'திண்ணையில்' அமர இடம்கொடுத்த திண்ணியர்க்கு தித்திப்பான நன்றி.

2011/1/13 Raman E. Siva
அன்புள்ள நண்பரை வலையில் மீண்டும் சந்திப்பதில் மகிழுவகை அடைகின்றேன் ,
நான் தங்களுடைய blog spot ல் மீண்டும் நுழைந்தேன் தங்களுடைய , மூன்று கவிதைகளை வாசித்தேன் , மிகவும் அருமை அதில் எனக்கு சிலகருத்துக்கள் உண்டு.
நல்ல நட்பை வளர்க்க போற்றுதலும் , புகழுதலும் மட்டும் போதாது குறைகளை சுட்டிக்காட்டுவதும் , போதிய விளக்கம் பெறுவதும் அவசியம் என்பதால் இந்த மின்-கடிதத்தை வரைகின்றேன்,  முதலில், முதலாளித்துவத்தின் சுறண்டல்.

. . . . . .

மற்ற இரு கவிதை

நண்பேன் . . . ?!? (மற்றும்) பிரியாத பிரிவுகள்

இந்த இரு கவிதைகளில் அளவுக்கு அதிகமான எதுகைகள் , சில இடங்களில் சுவையை குறைக்கிறது . சில இடங்களில் ( இயற்கையாக அமைந்தாலும் கூட)  ஒரே எழுத்துகளில் வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்றே சேர்த்து இருப்பதாக தோன்றுகிறது .

இதை தாங்கள் கவனத்தில் கொண்டு , ஆலோசிக்க வேண்டுகிறேன் .

இந்த கவிதைகளில் தங்களுடைய நிலைபாட்டையும், அறிய ஆவல் கொள்கிறேன் .

இப்படிக்கு , தங்கள் "ப்ளாக்" கில் புதிய படைப்புகளை எதிர் நோக்கும் .

வாசகன்

E . சிவராமன்
மதுரை        
- - - - - -

அன்பின் சிவராமன்,

தொடர்ந்த வருகைக்கும், கருத்தாய்வுக்கும் மிக்க நன்றி,

மறுபடி எழுதும் பொழுது கவனத்தில் கொள்கின்றேன்,

கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளவும்,

நட்புடன்,
மார்கண்டேயன். 

Sunday, November 14, 2010

முதலாளித்துவத்தின் சுறண்டல்

இயல்பு வாழ்வின்
இறகொடித்து
இயந்திரமாக்கினார்

பண்டமாற்றை
பணமாக்கி
பண்பாடு அகற்றினார்

படிக்கும் கல்விதனை
பணம் செய்வதற்கென்றே
பதியச் செய்தார்

விளையும் பொருளில்
விதிகள் கொண்டு
வினை மாற்றி வீணாக்கினார்

விலை நிலம்
விஷமாக, விவசாயியை
விஷம் உண்ணவைத்தார்

தாய்ப்பால் முதல்
தாரம் சுமக்கும் கரு வரை
தனி விலை வைத்தார்

உள்ளாடை போல்
உள்ளுருப்புக்கும்
உரிய விலை செய்தார்

விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்

காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு . . .

ஐயன்மீர் . . ., தயவுசெய்து அதற்கும்,
விலை வைத்து விடுங்கள்
உயிர் விடும் முன் முதலாளியாகிறேன்

இக்கவிதையை வார்ப்பில் வார்க்க வழி செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழ்த்துகள்.

. . .  திரு. சிவராமனின் மின்னஞ்சலின் தொடர்ச்சி,

இந்த கவிதையில்
விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்
காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு.

இந்த வரிகளில் மனிதன் விடும் கழிவு உரமாக இரண்டாம் உலகபோர்முடிவில்  ஐரோப்பாவின் சில பகுதிகளில்  உரதட்டுப்பாட்டின் காரணமாக விலைவைத்து, விற்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டுள்ளேன் . மேலும் முன்பே நமது நாட்டிலும் , தற்போது வடகொரியவிலும் மனிதகழிவுக்கு விலையுண்டு . உரங்களுக்கு மனித கழிவை பயன்படுத்த எல்லா நாடுகளிலும் கணிசமான செலவில் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளகிறார்கள்.

அடுத்து இந்த வரியில்

உயிர் விட்ட உடலும்
காலி உடலின் கழிவுகளையும்

என்ற வரியில் உள்ள கருத்துகளில் அதே ஐரோப்பாவில் மருத்துவ ஆராய்சிக்கு முன்பெல்லாம் பிற்போக்கு சமயவாதிகள்  மனித உடலை அறுப்பதையும் , ஆராய்ச்சி செய்வதையும் அனுமதிக்கவில்லை அப்போது , சில மருத்துவர்கள்  திருடர்களிடம் இறந்த உடலை புதைத்தபின் தோண்டி எடுத்து விலைகொடுத்து பெற்றுக்கொண்டார்கள் . இன்றும் கூட நமது நாட்டில் மந்திர, தந்திரங்களுக்கு, பயன்படுத்த உடல்களும், எலும்புகளும் மறைமுகமாக விற்கப்படுகிறது .  
 
- - - - - -
நன்றி, சிவராமன், புதிய தகவல், 

நீங்கள், அதன் சுட்டிகளை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், 
 
கருத்துக்களை, கமெண்ட்ஸ் பகுதியில் அனுப்பினால் மிகவும் எளிதாக இருக்கும் (இருவருக்கும்),
தங்களின் பொறுமையான எழுத்து, நன்றாக உள்ளது, விரைவில் உங்களின் பதிவுகளை காண்பதற்கு ஆவலாக உள்ளது, 

நட்புடன்,
மார்கண்டேயன்.
- - - - - -

Saturday, November 6, 2010

நண்பேன் . . . ?!?

மூலையில் முனகிக்கொண்டிருந்தவனை
முன் நிறுத்தி
முகவரி கொடுத்தேன்

முகவரி பெற்றவன்
முடிவதெல்லாம் தன்னாலென்று
முழுமதியற்று முழங்கினான்

முழங்கிய முட்டாள்
முட்டுக் கட்டையானான்
முடிவெடுக்க விடாமல்

முன் ஏற்றுக் கொண்ட பணிகள்
முடங்கவைத்து
முழுமகிழ்ச்சி கொண்டான்

முடிவதெல்லாம் தன்னால்
முடிவதென்று
முடிவற்ற பிம்பம் கண்டான்

முச்சந்தியில் பிதற்றினான்
முடிந்த இடங்களிலெல்லாம்
முரசடித்தான்

முரசொலி பொறுக்காமல்
மூடச் சொன்னேன் வாயை
மூடன் சொன்னான் வென்றதாய்

முழுதும் அறிந்தவர்
முன் வந்து சொன்னார்
முனகுபவனெல்லாம் முடியாதவர்

முன்னிறுத்துவது முடங்கிவிடுமென்று
முழுதும் உணர்ந்தாலும்
முயற்சிகள் அயர்ந்தன

முடிவெடுத்தேன்
முயற்சியற்றவனை
முன்வைப்பதில்லையென

முடிந்தவரை எதிரிகளை சந்திக்கின்றேன்
முடிவு வரும் காலம் வரை
முழுதுமறிந்த பின் முழங்குகின்றேன் நண்பேன் . . .

இக்கவிதையை திண்மையுடன் திண்ணையில் வீற்றச் செய்த திண்ணை ஆசிரியர்க் குழுவினருக்கு நன்றி.


2011/1/13 Raman E. Siva
அன்புள்ள நண்பரை வலையில் மீண்டும் சந்திப்பதில் மகிழுவகை அடைகின்றேன் ,
நான் தங்களுடைய blog spot ல் மீண்டும் நுழைந்தேன் தங்களுடைய , மூன்று கவிதைகளை வாசித்தேன் , மிகவும் அருமை அதில் எனக்கு சிலகருத்துக்கள் உண்டு.
நல்ல நட்பை வளர்க்க போற்றுதலும் , புகழுதலும் மட்டும் போதாது குறைகளை சுட்டிக்காட்டுவதும் , போதிய விளக்கம் பெறுவதும் அவசியம் என்பதால் இந்த மின்-கடிதத்தை வரைகின்றேன்,  முதலில், முதலாளித்துவத்தின் சுறண்டல்.



மற்ற இரு கவிதை

நண்பேன் . . . ?!? (மற்றும்) பிரியாத பிரிவுகள்

இந்த இரு கவிதைகளில் அளவுக்கு அதிகமான எதுகைகள் , சில இடங்களில் சுவையை குறைக்கிறது . சில இடங்களில் ( இயற்கையாக அமைந்தாலும் கூட )    ஒரே எழுத்துகளில் வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்றே சேர்த்து இருப்பதாக தோன்றுகிறது .
இதை தாங்கள் கவனத்தில் கொண்டு , ஆலோசிக்க வேண்டுகிறேன் .
இந்த கவிதைகளில் தங்களுடைய நிலைபாட்டையும் , அறிய ஆவல் கொள்கிறேன் .
இப்படிக்கு , தங்கள் "ப்ளாக்" கில் புதிய படைப்புகளை எதிர் நோக்கும் .
வாசகன்
E . சிவராமன்
மதுரை       

அன்பின் சிவராமன்,

தொடர்ந்த வருகைக்கும், கருத்தாய்வுக்கும் மிக்க நன்றி,

மறுபடி எழுதும் பொழுது கவனத்தில் கொள்கின்றேன்,

கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளவும்,

நட்புடன்,
மார்கண்டேயன். 

Saturday, October 30, 2010

மேன்மக்கள்

மலக்குழியில் இறங்கி
மனமிறந்து
மலம் அள்ளுபவரும்

சாப்பாட்டில் கை வைக்க
சாக்கடை அள்ள
சமாதானம் செய்துகொண்டோரும்

சுயகழிவகற்ற முடியாத
நோய் சுற்றிய மனிதனை
சுத்தம் செய்வோரும்

பிணவாடையின்
வீச்சங்களை விட்டொளித்த
பிண்டமறுப்போனும்

கலைக்கென்று சொல்லியே
காமப் பசியாற்றும்
கலைச் செல்விகளும்

சொந்த வீட்டிலும்
சுத்தமில்லா சுரணையற்றோர்
நடக்கும் வீதிகளை சுத்தம் செய்வோரும்

ஆயிரக்கணக்கானோர்
அவசரத்தில் வீசும் அசிங்கங்களை
அள்ளி எறிந்து அழகாக்குவோரும்

தொலைத்த காமத்தால்
வயிற்றில் தொடர்வதை
வழித்து எடுத்து வழிசெய்வோரும்

அவசரத்தில் பிறந்ததால்
அனாதையாக்கப்பட்ட
அன்பான குழந்தைகளும்

குப்பையை கிளறி
குடும்பம் நடத்தும்
குடியானவர்களும்

விலைபேசப்படும் உலகில்
இன்னும் விதைத்துக் கொண்டிருக்கும்
விவரம் கெட்ட விவசாயியும்

யார் வாழ்ந்தாலும்
வாழத் தெரியாத
மேன்மை கெடாத இந்த
மேன்மக்கள்
இன்னும் எத்தனை ஆயிரமோ ?

இக்கவிதையை வார்ப்பில் வார்க்க வழி செய்தமைக்கு வாழ்த்தி வணங்குகின்றேன்.

Sunday, October 24, 2010

மொழியாள்(ழ்)

அந்நிய தேசமது
அகலாத இரவின் நீட்சி
அதிகாலைப் பொழுது
ஆழ ஊடுருவும் குளிர்

அழுத்தம் கொடுக்கும் வயிறு
அடித்து எழுப்ப
அவசரமாக அவ்விடம் ஓட . . .
அங்கே அழகி ஒருத்தி

அவ்வேளையிலும்
அழகாக்கிக் கொண்டிருந்தாள்
அலுங்காமல் அசிங்கமாக்குமிடத்தை
அவசரமறிந்து பார்த்தாள்

அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தாள்
அவசரமாய் கதவடைத்து
அழுத்தம் அகற்றுகிறேன்
அலுக்காமல் நின்றவள்

அமைதியாய் தொடர்கிறாள், தான்
அனுதினம் செய்யும் பணியை
அடிமனதில் ஏதோ ஒன்று அறுக்க
அங்கிருந்து அன்பு பிறக்க

அவளின் கண்களுக்கு கொடுக்க
ஆறுதலாய் ஏற்றுக்கொண்டு
அவள் வேலையை தொடர்கிறாள்
ஆயிரம் மொழிகளுக்கு அடிப்படையான
அன்பெனும் மொழியை உணர வைத்த
அழகு மொழியாள்(ழ்)

இக்கவிதையை 'திண்ணையில்' அமரச் செய்தமைக்கு என் அன்பான நன்றிகளை அளிக்கின்றேன்.

Sunday, October 3, 2010

நான் இறந்து போயிருந்தேன் . . .

நான் இறந்து போயிருந்தேன் . . .
நிராகரிப்பின் நீச்சிகள்
நீளும் தருணங்களிலெல்லாம்
உடலெரிந்து பின்னிருக்கும்
சாம்பல் துகள்கள்
காற்றில் பறப்பதைப்போல்
நான் இறந்து போயிருந்தேன்
எறிந்த தரை இருப்பது போல
உயிர் இருந்தும் . . .

ஞானக் கணக்கை
நேர் செய்ய
பலரால் பல வழிகளில்
'நான்' இறந்து போயிருந்தேன் . . .
ஞானக் கண் மட்டுமேனோ
இன்னும் திறப்பதற்கு வழியேயில்லை ?!!

தாய்ப்பால் தடை செய்யப்பட்ட
காலம் தொட்டு
பால்யத்தில் கரம் பிடித்தவளின்
பிரிவு உட்கொண்டு
கணக்கற்ற தடவை
நான் இறந்து போயிருந்தேன் . . .

தொடர்ந்துகொண்டே இருக்கிறது
இறப்பும் பிறப்பும்
பள்ளித் தேர்வில் தவறிய போது
கல்லூரித் தகுதி அடையாதபோது
இன்னும் எத்தனையோ . . .

புதிது புதிதாய் . . .
'நான்' மட்டும் மாறாமல்
இருகோட்டுத் தத்துவமாய்
இறந்து கொண்டேயிருக்கின்றேன் . . .

இத்தனை முறை
மீள்த்துயிர்ந்தாலும்
இறுதி மூச்சு உள்ளவரை . . .
உதிரம் உளுத்துப் போகும் வரை
இனி மாற்ற முடியாத
இறுதிக்கோடாய்

இயல்பாய் இவனுள் சென்றவளை
இதயமறுத்து ஈருடலாய்
மெய்பித்தபோது . . .
வக்கற்றவனாய் . . .
கடைசியாய், உயிரோடு
நான் இறந்து போயிருந்தேன் . . .
இனிமேல் மீள முடியாமல்

இது திரு. கார்க்கி அவர்களின் வலைப்பூவில் பாரத் பாரதி அவர்கள் பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 'நான் இறந்து போயிருந்தேன் . . .' சவால் கவிதைப் போட்டிக்காக எழுதியது.

இக்கவிதையை 'திண்ணையில்' அமரச் செய்தமைக்கு என் அன்பான நன்றிகளை அளிக்கின்றேன்.

Thursday, September 30, 2010

சிறப்பு அடையாள அட்டை

நண்பர்களே, இந்த இடுகை பதிவர் செந்தில் அவர்களின் இடுகையை படித்தவுடன், இந்த விஷயத்தில் என் எண்ணங்களை பின்னூட்டமாக வெளிட்டுவிட்டு, சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே,

சென்ற ஆண்டிலிருந்து, பாரத அரசு, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து அதற்க்கான ஆணையம் அமைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தகவல்களை இங்கே காணலாம்.

பாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.

இந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.

நம் நாட்டில், மதம், மொழி, இனம், சாதி, சாதிய உட்பிரிவு, நண்பர்கள் குழு, கலைக் குழு போன்ற லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) சங்கங்கள் உள்ளது. இதில் பதிவு பெற்ற / பதிவு பெறாத சங்கங்கள் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், அரசின் பதிவு பெறாத சங்கங்கள் மூலம் தனி நபர் சேவையாற்ற முடியுமே ஒழிய, சிறப்பு அடையாள அட்டை ஏற்படுத்தும் பணியில் பங்கு கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இவ்விஷயத்தில் தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களையும் பங்கு பெறுவதற்கு வழி வகைகளை செய்துள்ளது.

அதன் விவரங்கள் இங்கே.

இத்திட்டத்தில் பங்கு பேர விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செய்ய வேண்டியது.

தனிநபர்:

முதலில் உங்களின் அனைத்து அரசு ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு, பின் வரும் மின்னஞ்சலுக்கு (webadmin-uidai@nic.in) தகவல் அனுப்பவும். பிறகு அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படவும். (நண்பர்களே: அந்த மின்னஞ்சலுக்குரிய நடவடிக்கை போன்றவை இந்தப் பதிவைத் தாண்டிய விஷயங்கள், அதனால் சொல்ல முடியவில்லை).

நிறுவனங்கள் (பதிவு பெற்ற நிறுவனங்கள்):

பதிவு பெற்ற சபைகள், நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர் குழு அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்த சிறப்பு அடையாள அட்டை திட்டத்தில் விருப்பமுள்ள உறுப்பினரையோ அல்லது உறுப்பினர் குழுவையோ
அமைக்கலாம்.

அவ்வாறு அமைக்கப்பட்ட உறுப்பினரோ/குழுவோ முதலில் அந்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின் வரும் அரசு ஆணையங்களை சரி பார்க்கலாம்.

௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).

மேற்கூறிய ஏழு ஆவணங்களிருந்தால், நம் நாட்டில் பிறந்த ஒருவரின் அனைத்து விவரங்கள் அரசில் பதிவு பெறப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
(இந்த ஆவணங்கள் மட்டும் தானா, அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை ?)

முதல் முயற்ச்சியே, அவர்கள் உறுப்பினர்கள் மேற்கூறிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பதைச் சரி பார்ப்பதே.

இரண்டாவதாக, இதில் எதாவது ஒரு ஆவணம் இல்லையென்றால், அதைப் பெற உதவுவது, அது சாத்தியமா ? (நம் நாட்டில் நிலவும் நடை முறைச் சிக்கல்கள் தெரிந்துள்ளதால்) தெரியவில்லை.

இறுதியாக, மேற்கூறிய ஆவணங்களை வைத்துள்ள உறுப்பினர் விவரங்களை, மென்பொருள் வடிவாக்கி, சேமித்து, மூன்றுக்கு மேற்பட்ட மென்தகட்டில் (CD/DVD) பத்திரப்படுத்திவிட்டு, இது தவிர தனியாக பத்திரப்படுத்திய மென்தகடை (CD/DVD)'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்க வேண்டியது.

இவ்வாறு, ௧௦௦ (நூறு) உறுப்பினர் கொண்ட ௧௦ (பத்து) நிறுவனங்கள் செய்தால், குறிப்பிட்ட கால அளவிற்குள், ௧௦௦௦ (ஆயிரம்) இந்தியர்களின் தகவல்கள் 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

கல்வி நிறுவனங்களின் பங்கு:

பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் தங்களிடம் பயில்வோர் மற்றும் பணி புரிவோர் விவரங்களை 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு வழங்கலாம்'.
இதன் மூலம் அரசின் பணிச் சுமை குறைவதோடல்லாமல், கணிசமான தனி நபர்களின் துல்லியமான விவரங்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

பதிவராக:

தமிழ்ப் பதிவராக, நாமும் இவ்விஷயத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொண்டு, நம்மிடமுள்ள ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு, நம்மிடம் இல்லாத ஆவணத்தை பெற்று, நம்குடும்பத்தினர் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு. தனி நபராக நம் நண்பர்கள் உறவினர்களின் தகவல்களை (குறைந்தது ஐம்பது நபர்கள்) 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்கலாம்.

ஆயிரக்கணக்கான, தமிழ்ப் பதிவர்களில் பத்து பதிவர்கள் இதனைச் செய்தால், குறைந்தது ஐநூறு நபர்களின் தகவல்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்'.

ஒரு, பாரத நாட்டினனாக, என்னாலான முயற்ச்சியை ('சிறப்பு அடையாள அட்டை ஆணையத்தினை' மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு) இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளேன்.

என் எண்ணங்களை ஏற்று, செயல்படுத்த அனுமதியளித்தால் என்னால் இயன்றதைச் செய்ய உள்ளேன்.

அனுமதி கிடைத்த பின், அது பற்றிய விவரம், இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.


இந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவை தங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக் குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடையச் செய்யலாம்.

பதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் ?

மேலும், இந்தப் பதிவை அப்படியேவோ அல்லது தங்கள் எண்ணங்களை கொடுத்து 'மீள் பதிவாகவோ' எந்தப் பதிவர் வேண்டுமானாலும் பதிப்பதற்கு பயன் படுத்திக்கொள்ளலாம். அந்தத் தகவலைத் தெரிவித்தால், இந்தப் பதிவிலும் இணைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

உங்கள் மேலான அன்பையும், ஆதரவினையும் நாடுகின்றேன்.

இவ்விஷயத்தை முதலில் பதிவிட்ட திரு. கார்க்கி அவர்களுக்கு என் அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

திரு. கார்க்கி அவர்களின் பதிவிலிருந்து தன் வலைப்பூவிலும் பதிவிட்ட திரு. ரவிக்குமார் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்பதிவு, ஈகரையிலும் பதிக்கப் பெற்றதை (02.10.2010) இன்று தான் (18.11.2010) அறிந்தேன், மிக்க மகிழ்ச்சி.


'சிறப்பு அடையாள அட்டை' பதிவிற்கான தொடர்பினை தங்கள் வலைத்தளத்தில் ஏற்படுத்திக் கொடுத்த (02.12.2010) மதிப்பிற்குரிய பதிவர் இட்லி வடை அவர்களுக்கு மிக்க நன்றி,

இப்பதிவினை மீள் பதிவிட்ட ஆஷா சில்வியா அவர்களுக்கு மிக்க நன்றி. 

Thursday, September 23, 2010

காலச்சுவடுகள் . . .

பிடித்தாலும், நிறுத்த நினைத்தாலும்,
நிற்காமல் புதிது புதிதாய்,
பதிகின்ற காலச்சுவடுகள்,

எப்போழுதென்றே தெரியவில்லை . . .
ஆரம்பம்,

முதல் சுவடு எது,
கடைசி பதிப்பு எது,
விடையில்லா தொடர்கதை,

எங்கேயோ, எப்பொழுதோ,
விட்டதோ, தொட்டதோ,
யார் யாரோ,
அனைத்தும் ஒன்று விடாமல்,

மறதி மறந்து
மனம் நின்றுகொண்டிருந்தாலும்,

காலச்சுவடுகள் மட்டும்
நிற்காமல்
அடுத்த பதிவை நோக்கி . . .

நன்றி, வார்ப்பு.

Sunday, September 12, 2010

என்னோட ராவுகள் . . .

நெறைய மதுரக்காரங்க, மதுரைய பத்தி (முக்கியமா மதுர 'நைட்ட') எழுதுனதுல, எனக்கும் ரங்கராட்டினம் (எத்தன நாள் தான், கொசுவத்தி, சைக்கிள் சுத்துறது, மாமு கண்டுக்காதீங்க . . .) ரிவர்சுல சுத்திடுச்சு . . . நிறுத்த முடியலியே, அப்பறம் என்னாச்சுன்னா . . . இந்தப் பதிவு (கிழிஞ்சது போ ன்னு சொலறது காதுல கேக்குது) . . .

நானும் யோசிச்சு, யோசிச்சு பாக்குறேன், 'அது ஒரு கனாக்காலம்' எப்ப ஆரம்பிச்சதுன்னு சரியாத் தெரியல . . .

இருந்தாலும், 'அவளோட ராவுகள்' பார்த்து (போஸ்டரத் தான் ன்னு சொன்ன நம்பவா போறீங்க ?!!) நின்னத, வீட்ல யாரோ போட்டுக்கொடுக்க, தெனோம், ஒழுங்கா ஸ்கூலுக்கு போகும் போது வழிய மட்டும் பாத்துப்போன்னு சொல்ல ஆரம்பிச்சத . . . ஒரு வழியா காலேஜு தர்ட் இயற் படிச்சு முடிச்ச உடனே நிறுத்திட்டாங்க (அதுக்கு மேல சொல்ல முடியல, ஏன்னா . . . படிக்கிறதுக்கு வெளியில போயிட்டோம்ல)

அப்பாடா, அவளோட ராவுகள்ள இருந்து, என்னோட ராவுகள் ஞாபகத்துக்கு வந்துர்ச்சு . . .
கிட்டி புல்லு, குண்டு, பூந்தா, படமாட்டே, சைன் வெளி (பம்பரம்), அப்படி பாலரெங்கபுரத்துல போயிகிட்டிருந்த பொழுதுல, பத்தாவது படிக்கிற வரைக்கும் நைட் ஸ்டடிக்கு அவசியம் வரல (அப்பிடின்னா ஒழுங்கா படிச்சிட்டிருந்ததா . . . அர்த்தம்),

பத்தாவது லீவுல வயசுக்கு வந்து (அதாங்க, கைலி ஒரு வழியா கட்டத் தெரிஞ்சுகிட்டு . . .), அப்பவும் விடாம பூந்தா வெளையாடி, தெரு சண்டையெல்லாம் போட்டு, ஒரு வழியா . . . குவாட்டர்லி , பரிச்ச தேதி சொன்ன உடனே, படிக்கனும்ன்னு பல நாளு, சந்து முக்குல, காலியா இருக்கிற பல வீட்டு திண்ணையில . . . முடிவெடுத்து . . . மதியம் எக்ஸ்ட்ராவா தூங்கி , ஒரு நல்லா நாள்ல நைட்டு பத்து மணிக்கு மேல . . . படிக்கிறதுக்கு நாங்க எல்லாரும் வெளியில வந்துட்டோம் . . .

படிச்சோமா இல்லையான்னு தெரியாது . . . படிக்கிறது கஷ்டம்னு மட்டும் தெரிஞ்சுது . . .
சரி, நடுவுல தூக்கம் வந்துரக் கூடாதுல்ல . . . அதனால, மறக்காம டீ காசு கேட்டு வாங்கிக்குவோம் (ரெகுலரா, எது செய்றியோ இல்லையோ இத மட்டும் கரக்டா கேளுங்க்ரத கேட்டு, கேட்டு . . . மறத்துப் போச்சு . . . இருந்தா மட்டும் ரொம்பத் தான் சொரணை . . . ?!!!)

ஒரு வழியா, பதினொரு மணிக்கு, டீ சாப்புட, லோகு கட, போக ஆரம்பிச்சது . . . அப்பிடியே, முனிச்சால முக்கு, தினமணி டாக்கீஸ்ன்னு எக்ஸ்டெண்டாச்சு . . . அப்பறமென்ன . . . பருத்திப் பாலு, சில நேரம் புரோட்டா சால்னா, பிட்டு, இட்லி . . . சாப்பாடு மட்டும் கூடிக்கிட்டே போச்சு . . . கூடவே, படிக்க வேண்டிய பாடமும் . . .
எக்ஸாம் முன்னாடி, எப்டியோ பாஸ் பண்ற லெவலுக்கு தேத்திருவோம் (பிட்டத் தான்)
ஒரு வழியா காலேஜு வந்த ஒடன, புது குரூப்பு, இப்ப கொஞ்சம் தைரியம் வந்துருச்சு . . .

தினமணி டாக்கீஸ் வரைக்கும் இருந்தது . . . டைரக்சன் மாறி, மிசன் ஹாஸ்பிடல், அப்படியே, பழைய மாகாளிப் பட்டி ரோட்டுக்கு எதுத்தாப்புல இருக்கிற அண்டர் கிரவுண்டு கடன்னு . . . ஏன்னா, சமூகத்துல சில பேரு, பொக போட்டு கொசுவ வெரட்டுற அரும்பணிய கையில எடுத்திருந்தாங்க . . . அவங்க பாதுகாப்பு கருதி அண்டர் கிரவுண்டு தான் இனிமேன்னு பஞ்சாயத்து பைசலாச்சு . . . ஆனா யாரையும், கம்பெல் பண்ண மாட்டோம்,

ஒரே ஒரு வார்த்த சொல்லுவோம்,

"மாமு, உன்னைய தம்மடிக்க கூப்ட்டா தப்பு, வர்றதுக்கு என்னடா ? கேடு . . . இந்த மயித்துக்கு நீ வீட்லயே படிச்சிர்க்கலாம்ல . . . ",

அதுக்கப்பறமும், வரலன்னா, அவேன் மதுரக்காரனே கெடையாது . . . !!!


இப்பிடியே, படிச்சு (??!!!), காலையில ரெகுலர், அன்னைக்கு மதியமே ஒரு அரியர், அதுக்கு அடுத்த நாள் காலையிலேயே, ஒரு ரெகுலர்ன்னு எழுதி பாஸ் பண்ணிட்டோம்ல . . .

அப்பறம், அந்தக் கும்பல்லயும், கும்மி அடிக்காம, படிச்சவங்க மேல படிக்கப் போக, எனக்கும் கலைவாணி அருள் கெடைக்க, நானும் மேல படிக்க (?!!!) கெளம்பிட்டேன் . . .

என்னைக்காவது ஊருக்கு வரும் போது எப்பவாவது, நைட்டு பத்து மணிக்கு மேல பட்டரைய போட்டோம்ன்னா . . .

பஸ் ஸ்டாண்டு, அங்க இங்கன்னு சுத்தி, வீடு வந்து சேரம் போது . . . காலையில மணி அஞ்சாயிர்க்கும் . . .

தூக்கத்துலயும் . . . கரக்ட்டா சொல்வாங்க . . . அப்படியே ரயில்வே ஸ்டேஷன்லயோ, பிளாட்பார்ம்லையோ செட்டில் ஆயிட்டீன்னா . . . சாப்பாடு, தங்குறது எல்லாமே மிச்சம்னு . . . வழக்கம் போல பேசாம போயி படுத்துற வேண்டியது தான் . . .

இப்படியே, ஒரு பத்து, பன்னெண்டு வருஷம் 'என்னோட ராவுகள்' இருந்துர்க்கு . . .
இன்னைக்கு, மதுரையே மாறிடுச்சுன்னு மதுரை சரவணன் எழுதி இருக்கிறதப் பாக்கும் போது . . . மேல சொன்னதெல்லாம் நெசந்தானான்னு தோணுது . . .

இதுக்கு தான் மாப்ள, நம்ம எல்லாம் ஊர்லையே இருந்துர்க்கனும் . . .

என்ன செய்ய எல்லாம் நேரப் ... ட ... ?

Friday, August 13, 2010

மானுட குவியலுக்குள் ஒருவன்

பறந்து விரிந்திருக்கும் இந்தப் பதிவுலகின் படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்தவனுக்கு, 'வார்த்தைகளில் யாழிசைக்கும் கவிஞன் கமலேஷிடமிருந்து அழைப்பு, பதிவுலகில் நான் என்ற தொடர் பதிவிற்கு.

பலமுறை யோசிக்கிறேன், வியப்பாய் இருந்தது, கவிதை தவிர பதிக்கப்போகும் முதல் பதிவே தொடர்பதிவெனும் போது சற்று மிரட்சியும் (உண்மைய சொல்லனும்னா, இப்ப என்ன எழுதி கிழிச்சிட்டேன்னு, இத எழுதுற).

கமலேஷிற்கு நன்றி கூறி, தொடர்கிறேன்,

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மார்கண்டேயன்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆம், என்னுடைய பெயர் மிக சகஜமான பெயராதலால், எங்கள் குடும்பப்பெயர் சற்று மாறுதலாக இருந்ததால் வைத்துவிட்டேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

அது ஒரு அதிகாலை பொழுது, அடர்ந்த காடு, ஒற்றையடிப் பாதையில் நான், தூரத்தில் விழும் அருவி, பறவைகளின் இன்னிசை, பரவசங்களுடன் கூடிய பயணம், மெல்லிய புகை மூட்டம், சற்று அடர்த்தியாக,
தூரத்தில் ஒரு ஒளிக்கற்றை, திடீரென்று ஒரு பேரொளி, அதைத் தொடர்ந்த ஒரு இனிமையான குரல்,
"வா, மகனே, வா, நான் தான் தமிழ்த் தாய், எத்தனை வலைப்பதிவுகள் இருந்தாலும், உன் எழுத்துக்கள் இல்லாமல் . . . ",
மடேர், வாகனங்களின் பேரிரைச்சல், ரோட்டுல போகும் போதும் கனவா, டேய், வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா . . .
சகஜ நிலைக்கு வந்து, அப்ப ஒரு ப்ளாக ஆரம்பிச்சே தீரனும், நிற்க,

தனிமை நிழலான போது,
தவிக்கச் செய்த நினைவுகள்
தலை தூக்க,
தவித்துப் போன நெஞ்சின்
தவிப்புகள் தலையெடுக்க,
தவறியதெல்லாம் தட்டச்சாகி பதிவுகளாய் . . .

மேற்கூறியது தான் உண்மை.

இருப்பினும், வலையுலகத்திற்கு வரச் செய்ததில் முக்கிய பங்கு, இரவுப்பாடகன் கவிதைகள், பின்னர் மின்பாக்கள், ப்ரியனின் ப்ரிய வரிகள், அப்போது கூட, வலையுலகம் முழுமையாய் தெரியாது, பின்னர் ஒ மகசீயா விற்கான விளக்கம் கண்டவுடன், அங்கே பின்னூட்டம் எழுதியவர்களை தொடர்ந்து அறிந்த பின் இப்படியொரு உலகம் இருப்பது தெரிந்தது.

அப்பவே தெரிஞ்சிடுச்சு, நிறைய பேரு நல்லா எழுதுறாங்க, அதனால, எழுத தெரிஞ்சத மட்டும் எழுதிட்டு பேசாம இருக்கனும்ன்னு, சோ, அத மெய்ண்டைன் பண்ணிட்டிருக்கேன்,

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

ஆரம்பத்துல தெரிஞ்சவங்க, தெரியாதவங்களுக்கெல்லாம் மெயில் அனுப்பி கஷ்டப்படுத்துனேன், இப்ப நான் செஞ்ச தப்ப உணர்ந்து திருத்திக்கிட்டேன்,

மற்றபடி, நிறைய பேருடைய வலைப்பதிவுல பின்னூட்டம் போடுறதுனால, சில பேரு வந்து பாத்துட்டு போறாங்க, அது போதும்.

ரெண்டு, மூணு, மின் குழுமத்துல மட்டும், தெரிவிக்கிறேன், அவ்வளவுதான்.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நான் உணர்ந்த விஷயங்கள் எழுதும் போது, என் உணர்வுகள் வருவது இயற்கை, என் உணர்வுகள் ஏதாவது ஒரு எடத்துலயாவது ஓட்டிட்டு இருக்கும், அவ்வளவு தான்.

விளைவு: பிடிக்கிறவங்க படிப்பாங்க, இல்லன்னா சுலபமா நிராகரிச்சுருவாங்க.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டுமில்லை, கையாலாகாதவன், கவிதைகளில் மட்டுமே கதைக்கிறேன், பிறகு வழக்கம் போல, சூழலுக்கேற்ப சுற்ற ஆரம்பிக்கிறேன்,
இந்த ஒரு இடத்திலாவது, பணம் என்பதைத் தள்ளி வைத்திருக்கிறேன்.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

இரண்டு, ஒன்று இந்தப் பதிவு, மற்றொன்று, ஸௌராஷ்ட்ர மொழிக்காக: சில மென்பொருட்கள் உருவான பின் தொடர்வேன்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன் ?

பொறாமை, கோபம், இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிடுகிறது சிலருடைய பதிவுகள். மீண்டும், மீண்டும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய என்ற உணர்வே
மேலோங்குகிறது.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

பல நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் பாராட்டினார்கள், அது இங்கே, பின்னூட்டம் மூலம் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து ஊக்குவிப்பவர்கள், நமசிவாய ஈஸ்வரி, சுயம் தேடும் பறவையாய் சுகம் தந்து கொண்டிருக்கும் கமலேஷ், மற்றும் பின்னூட்டமிடும் அனைவரும்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

தேவையானதை இங்கேயே தெரிவித்திருக்கிறேன், இதுக்கும் மேலன்னா . . வேணாம், (தம்பட்டம், தண்டோரா போட்டாச்சு, இதுக்கு மேல சொறின்ஜோம்னா ரத்தம் வருமாமே . . .).

உன்னிடத்தில் நீ நிலைக்காதவரை பிறருக்கு போதிக்கும் அதிகாரமில்லை . . . என்ற பாலகுமாரனின் வரிகள் பலமுறை யோசிக்க வைக்கிறது. இத சொல்றதுக்கும் அதிகாரம் இருக்கா (??!!) தெரியல.

இந்த நட்பு வளையத்தில் நான் கோர்க்க நினைக்கும் நல்லிதயங்கள்:

சகோதரி நமசிவாய ஈஸ்வரி,
நண்பர் இரவுப்பாடகன்,
நண்பர் கூடல் குமரன்.
நண்பர் தனி காட்டு ராஜா
நண்பர் கொன்றல் காற்றோன் ராஜன்
மற்றும்
நண்பர் பெய்யெனப் பெய்யும் மழை பிரதீப்

தட்டுத் தடுமாறி எழுதி முடிச்சிர்க்கேன், பாத்து குத்துங்கப்பு . . .

அழைப்பினை ஏற்று, தொடர்ந்த பிரதீபிற்கு மிக்க நன்றி,
அழைப்பினை ஏற்று, தொடர்ந்த தனி காட்டு ராஜாவுக்கு மிக்க நன்றி,

ஓடி உதைத்து விளையாடு...

நிராகரிப்பு
நம்பிக்கை துரோகம்
நயவஞ்சக கூட்டம்
பந்துகளாய் உன்னை
பந்தாட வரலாம்
உண்மை உயர்சிந்தனை
உறுதியான உள்ளம், உடல் . . .
ஊக்கம், விடாமுயர்ச்சியுடன்
உன்னை உரமேற்றி வைத்துக்கொள்
ஒடுங்கிப்போகாமல், ஓய்ந்துவிடாமல்
ஓடி உதைத்து விளையாடு

நன்றி, வார்ப்பு

Monday, July 5, 2010

மதசார்பின்மை

காமப்பசி தீர்க்க
கட்டிலுக்கு துணைதேடி
தூதுபோகும் வேளைகளில்

அவிழ்த்துப்போட்டு அரங்கேற்றும்
ஆரவார ஆர்பரிப்பை
அகன்ற திரையில் அசையாமல் காணும்பொழுதுகளில்

பணமின்மையை பகடையாக்கி
பணம்கொடுத்து வட்டி வாங்கி
வயிர் நிரப்பும் நேரங்களில்

அழகாக பேரம் பேசி
ஆதிக்கத்தை அமல்படுத்தும்
அகங்கார செயல்முறையில்

உயிர்க்கான அவசரத்தில்
உதவி பெறும்
உயர் நிலையில்

மதசார்பின்மை
மறக்காமல்
நடைமுறையில்

நன்றி, திண்ணை.

Tuesday, June 29, 2010

முடிந்து போன பாதை

ஒவ்வொரு வினாடிகளும்
முடிந்து போன பாதையாய்
மாறிக்கொண்டிருக்கும்
இடைவிடாத வாழ்க்கை பயணத்தில்
முன் உள்ள நேரங்களை
முயற்ச்சியின் வழி முன்னிறுத்தி
முடிந்ததற்கும்
முடியப்போறவைகளுக்கும்
முறியாத முடிச்சுகள் போட்டுவைப்போம்

நன்றி, வார்ப்பு

Monday, May 31, 2010

என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகள்

சுயம் தேடும் பறவையாக . . .
என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகளிலிரிந்து
எப்பொழுதாவது என்னை மீட்டெடுக்கிறேன்
மீட்டெடுக்கும் தருணங்களில் . . .
மீதமுள்ள வாழ்க்கையின்
வாக்கியங்கள்
நிகழ்கால நிஜங்களால்
முற்றுப்பெறாமல்...
நீரோடையில் மிதக்கும் தக்கையாக . . .

நன்றி., வார்ப்பு இணைய இதழுக்கு.

Friday, May 28, 2010

பரம்பொருள் பார்த்தோமே

பாய்விரிப்பதைப் பற்றி பகர்வதே
பாவமெனப் பார்க்கும் பண்பாட்டில்
பாய்விரித்ததைப் பதிவுசெய்ய
பதுக்கிவைத்த பதிவுக்கருவியில்
பதிவுசெய்ததை
பலர் பார்க்கும் படக்கருவியில்
பலமுறை பலரோடு
பார்த்து பரவசமடைந்து
பரம்பொருள் பார்த்தோமே . . .

பார்த்ததை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.

Monday, May 3, 2010

காதலுற்றேன்....

காதலுற்றேன்....

ஈன்றவள் ஈந்ததோ ?
இல்லை . . .
தகப்பன் தந்ததோ ?
இல்லை . . .
உறவுகள் உணர்த்தியதோ ?
இல்லை . . .
உற்றார் உரைத்ததோ ?
இல்லை . . .
நட்புகள் நவின்றதோ ?
இல்லை . . .
பால்ய வயதின் பழக்கமோ ?
இல்லை . . .
பள்ளியில் பயின்றதோ ?
இல்லை . . .
பருவ வயதில் படர்ந்ததோ ?
இல்லை . . .
பல்கலையில் படித்ததோ ?
இல்லை . . .
பல பிறப்பில் பதிந்ததோ ?
இல்லை. . .

பின் எப்போது காதலுற்றேன்..
உன்னைக் கண்டவுடன் காதலென்று சொல்ல . . .?

உன்னை நான் கண்ட நாள் முதல் காதலுற்றேனா ?
இல்லை.. நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா ?

எனக்குள் காதல் இருந்ததால் காதலுற்றேனா ?
இல்லை . . .

உன் காதலால் காதலுற்றேனா ?
இல்லை . . .

கருவுற்றபோதே காதலுற்றேனா ?
இல்லை . . .

காதலுற்றதால் கருவானேனா ?
இல்லை . . .

. . . நான் எப்போது காதலுற்றேன் ?

மலர்ந்த நாள்: ஸௌராஷ்டிர விஜயாப்தம் 698, முதல் மாதம் 20 ம் தேதி.


நிலாச்சாரலில் கவிதையை காண கீழே சொடுக்கவும்,


நிலவின் குளுமையோடு, நிலாச்சாரலில் நித்தம் நிலைக்கச்செய்த நிலாச்சாரல் குழுவினரக்கு நிறைந்த நன்றி,

Wednesday, April 21, 2010

சதையானவள் . . .

மதிப்பிற்குரியோரே,

மார்கண்டேயனின் மலர்ச்சோலைக்குள் நான்காவது மலராய் வந்திருப்பவர்,

'சதையானவள்',

திண்ணையில் திண்மையுடன் வீற்றிருக்கிறார் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004184&format=html),

இவரை இணையத் திண்ணையில் இருக்க இடம்கொடுத்த திண்ணையில் அமர்ந்து தமிழ்த் திறன் செய்யும் திண்ணை (www.thinnai.com) குழுவினருக்கு திவ்யமான வணக்கம்,

திண்ணையில் அமர்ந்த நாள்: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் 698, முதல் மாதம், ஐந்தாம் தேதி.

சதையானவள் . . .

ஜாதி இல்லை மதமும் இல்லை,
காதல் இல்லை காமம் இல்லை,
வாலிபம் தொலைந்தது நினைவில்லை,
வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை,

. . .

இச்சையின் பிச்சை பசி போக்க,
எச்சிலால் தாகம் தீர்க்க,
வியர்வையின் வீச்சங்கள் விசிறி வீச,

. . .

குடிகெட்ட(கெடுத்த)குறிகளாலே,
குறிகளின் குறிக்கோள்களுக்கென்றே,
குமைந்து போன வாழ்க்கையில்,
சதையென்ற சவமாகி,
சதையாலே 'சமாதி' அடைந்திட்டோமே ...

மார்கண்டேயன்.

Friday, April 16, 2010

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

மார்க்கண்டேயனின் மனதில் மலர்ந்த படத்திற்கான பதிவு, ஒரு குறுங்கவிதையாக வார்க்கப்பட்டுள்ளது

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

உனக்கென்ன . . .
ஒற்றை பாதணி தொலைத்தபோது, மிஞ்சிய
ஒற்றை பாதணியை பத்திரப்படுத்திவிட்டாய்,
அன்றைத் தொலைந்த என் இதயம் மட்டும்,
இன்னும்,
தொலைந்து போன ஒற்றை பாதணியாய் . .

மலர்ந்த நாள்: ஸௌராஷ்டிரா விஜயாப்தம் 698, முதல் மாதம், மூன்றாம் தேதி.


என் வரிகளை வார்ப்பில் வார்த்து, வளரச்செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழிய வாழ்த்துகள்,


மார்கண்டேயன், மதுரை, பாரதம்

Monday, February 15, 2010

என் உயிர்... (தோழி)

எம் நேசத்திற்குடையீர்,

என்னுயிர்க்கு தோழியாய், துணையாய் நின்றவளை, நிலாச் சாரலலில் நிலவின் குளுமையோடு வைத்துள்ளேன், எம்முயிரை உணர்க . . .

என் உயிர்... (தோழி)

என்னவளே . . .
என்னை எனக்கறிவித்து,
என்னுள்ளே என்னை எழுப்பி,
எனக்கேற்றம் கொடுத்து,
என்னுள் என்னை நிலைக்கச் செய்து,
என்னை எங்கும் நிறைவாக்கி,
என் நெஞ்சைப் பஞ்சாக்கி,
என் வீழ்ச்சிகளை விதைகளாக்கி,
என் வீரத்தை விவேகமாக்கி,
என் எழுத்தை கவிதையாக்கி,
என்னுயிரை உவப்பாக்கி,
என் வாழ்வை வளமாக்கிய,
என்னவளே எப்படியடி
என் எலும்பை சுக்குநூறாக்கி,
என் நெஞ்சை இரண்டாக்கி,
என்னிலிருந்த உன்னை இடம்மாற்றி,
எம்மையும் உம்மையும் உடன்பிறப்பாக்கி,
எம் நினைவை நிர்மூலமாக்கி,
எம்மைப் பேசும் ஊமையாக்கி,
எம் வாழ்வை சிதிலமாக்கி......
. . .
.....

என் கண்ணே எப்படியடி,
என்னை இன்னும் உருக்குலையாமல் வைத்திருக்கிறாய்?
என் கண்ணே எப்படியடி
எம் முன் கலைந்த நேசத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறாய்
என்னுயிர்த் தோழியே நான்
எப்பிறப்பில் செய்த தவமடி நீ?

எம்முயிரின் நினைவுகள் நிலாச்சாரலில், நீங்காமல் நிலைபெற செய்த நிலவு (நிலாச்சாரல்) குழுவினருக்கு,

நித்தம் உரைக்கின்றேன், நிலையான நன்றி,