மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Thursday, September 30, 2010

சிறப்பு அடையாள அட்டை

நண்பர்களே, இந்த இடுகை பதிவர் செந்தில் அவர்களின் இடுகையை படித்தவுடன், இந்த விஷயத்தில் என் எண்ணங்களை பின்னூட்டமாக வெளிட்டுவிட்டு, சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே,

சென்ற ஆண்டிலிருந்து, பாரத அரசு, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து அதற்க்கான ஆணையம் அமைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தகவல்களை இங்கே காணலாம்.

பாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.

இந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.

நம் நாட்டில், மதம், மொழி, இனம், சாதி, சாதிய உட்பிரிவு, நண்பர்கள் குழு, கலைக் குழு போன்ற லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) சங்கங்கள் உள்ளது. இதில் பதிவு பெற்ற / பதிவு பெறாத சங்கங்கள் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், அரசின் பதிவு பெறாத சங்கங்கள் மூலம் தனி நபர் சேவையாற்ற முடியுமே ஒழிய, சிறப்பு அடையாள அட்டை ஏற்படுத்தும் பணியில் பங்கு கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இவ்விஷயத்தில் தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களையும் பங்கு பெறுவதற்கு வழி வகைகளை செய்துள்ளது.

அதன் விவரங்கள் இங்கே.

இத்திட்டத்தில் பங்கு பேர விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செய்ய வேண்டியது.

தனிநபர்:

முதலில் உங்களின் அனைத்து அரசு ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு, பின் வரும் மின்னஞ்சலுக்கு (webadmin-uidai@nic.in) தகவல் அனுப்பவும். பிறகு அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படவும். (நண்பர்களே: அந்த மின்னஞ்சலுக்குரிய நடவடிக்கை போன்றவை இந்தப் பதிவைத் தாண்டிய விஷயங்கள், அதனால் சொல்ல முடியவில்லை).

நிறுவனங்கள் (பதிவு பெற்ற நிறுவனங்கள்):

பதிவு பெற்ற சபைகள், நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர் குழு அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்த சிறப்பு அடையாள அட்டை திட்டத்தில் விருப்பமுள்ள உறுப்பினரையோ அல்லது உறுப்பினர் குழுவையோ
அமைக்கலாம்.

அவ்வாறு அமைக்கப்பட்ட உறுப்பினரோ/குழுவோ முதலில் அந்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின் வரும் அரசு ஆணையங்களை சரி பார்க்கலாம்.

௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).

மேற்கூறிய ஏழு ஆவணங்களிருந்தால், நம் நாட்டில் பிறந்த ஒருவரின் அனைத்து விவரங்கள் அரசில் பதிவு பெறப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
(இந்த ஆவணங்கள் மட்டும் தானா, அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை ?)

முதல் முயற்ச்சியே, அவர்கள் உறுப்பினர்கள் மேற்கூறிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பதைச் சரி பார்ப்பதே.

இரண்டாவதாக, இதில் எதாவது ஒரு ஆவணம் இல்லையென்றால், அதைப் பெற உதவுவது, அது சாத்தியமா ? (நம் நாட்டில் நிலவும் நடை முறைச் சிக்கல்கள் தெரிந்துள்ளதால்) தெரியவில்லை.

இறுதியாக, மேற்கூறிய ஆவணங்களை வைத்துள்ள உறுப்பினர் விவரங்களை, மென்பொருள் வடிவாக்கி, சேமித்து, மூன்றுக்கு மேற்பட்ட மென்தகட்டில் (CD/DVD) பத்திரப்படுத்திவிட்டு, இது தவிர தனியாக பத்திரப்படுத்திய மென்தகடை (CD/DVD)'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்க வேண்டியது.

இவ்வாறு, ௧௦௦ (நூறு) உறுப்பினர் கொண்ட ௧௦ (பத்து) நிறுவனங்கள் செய்தால், குறிப்பிட்ட கால அளவிற்குள், ௧௦௦௦ (ஆயிரம்) இந்தியர்களின் தகவல்கள் 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

கல்வி நிறுவனங்களின் பங்கு:

பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் தங்களிடம் பயில்வோர் மற்றும் பணி புரிவோர் விவரங்களை 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு வழங்கலாம்'.
இதன் மூலம் அரசின் பணிச் சுமை குறைவதோடல்லாமல், கணிசமான தனி நபர்களின் துல்லியமான விவரங்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

பதிவராக:

தமிழ்ப் பதிவராக, நாமும் இவ்விஷயத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொண்டு, நம்மிடமுள்ள ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு, நம்மிடம் இல்லாத ஆவணத்தை பெற்று, நம்குடும்பத்தினர் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு. தனி நபராக நம் நண்பர்கள் உறவினர்களின் தகவல்களை (குறைந்தது ஐம்பது நபர்கள்) 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்கலாம்.

ஆயிரக்கணக்கான, தமிழ்ப் பதிவர்களில் பத்து பதிவர்கள் இதனைச் செய்தால், குறைந்தது ஐநூறு நபர்களின் தகவல்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்'.

ஒரு, பாரத நாட்டினனாக, என்னாலான முயற்ச்சியை ('சிறப்பு அடையாள அட்டை ஆணையத்தினை' மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு) இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளேன்.

என் எண்ணங்களை ஏற்று, செயல்படுத்த அனுமதியளித்தால் என்னால் இயன்றதைச் செய்ய உள்ளேன்.

அனுமதி கிடைத்த பின், அது பற்றிய விவரம், இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.


இந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவை தங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக் குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடையச் செய்யலாம்.

பதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் ?

மேலும், இந்தப் பதிவை அப்படியேவோ அல்லது தங்கள் எண்ணங்களை கொடுத்து 'மீள் பதிவாகவோ' எந்தப் பதிவர் வேண்டுமானாலும் பதிப்பதற்கு பயன் படுத்திக்கொள்ளலாம். அந்தத் தகவலைத் தெரிவித்தால், இந்தப் பதிவிலும் இணைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

உங்கள் மேலான அன்பையும், ஆதரவினையும் நாடுகின்றேன்.

இவ்விஷயத்தை முதலில் பதிவிட்ட திரு. கார்க்கி அவர்களுக்கு என் அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

திரு. கார்க்கி அவர்களின் பதிவிலிருந்து தன் வலைப்பூவிலும் பதிவிட்ட திரு. ரவிக்குமார் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்பதிவு, ஈகரையிலும் பதிக்கப் பெற்றதை (02.10.2010) இன்று தான் (18.11.2010) அறிந்தேன், மிக்க மகிழ்ச்சி.


'சிறப்பு அடையாள அட்டை' பதிவிற்கான தொடர்பினை தங்கள் வலைத்தளத்தில் ஏற்படுத்திக் கொடுத்த (02.12.2010) மதிப்பிற்குரிய பதிவர் இட்லி வடை அவர்களுக்கு மிக்க நன்றி,

இப்பதிவினை மீள் பதிவிட்ட ஆஷா சில்வியா அவர்களுக்கு மிக்க நன்றி. 

14 comments:

 1. நல்ல முயற்சி. செய்யலாமே!

  ReplyDelete
 2. நல்ல சிந்தனை! நானும் அதன் விவரம் என்ன என்றுத் தெரிந்துக் கொள்கிறேன். ஏதாகிலும் செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.

  பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 3. நான் பதிவிட்டு விட்டேன்.

  நல்ல முயற்சி

  http://www.karkibava.com/2010/09/blog-post_30.html

  ReplyDelete
 4. அதே பதில்தான் தோன்றுகிறது..
  நல்ல முயற்சி...
  வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்

  ReplyDelete
 5. சார் இப்பதான் பதிவை பார்க்கிறேன்..நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெகு குறைவு .. இந்த பணத்தில் அவர்கள் மீட்டிங் போடத்தான் சரியாக இருக்கும் ...

  ReplyDelete
 6. //நல்ல முயற்சி. செய்யலாமே!//

  ஊக்கத்திற்கு மிக்க நன்றி அருண்.

  ReplyDelete
 7. //நல்ல சிந்தனை! நானும் அதன் விவரம் என்ன என்றுத் தெரிந்துக் கொள்கிறேன். ஏதாகிலும் செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.

  பகிர்விற்கு நன்றி!//

  முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி வசந்த், நானும் பல தகவல்களை சேகரிக்கின்றேன், கிடைத்தவுடன் பதிவிடுகின்றேன்.

  ReplyDelete
 8. //நான் பதிவிட்டு விட்டேன்.

  நல்ல முயற்சி//

  மிக்க நன்றி கார்க்கி, உங்களின் பதிவு மூலம் இந்த விஷயம் பலரைச் சென்றடைந்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது,
  மேலும், உங்கள் பதிவு மூலம் திரு. ரவிக்குமார் இந்த விஷயத்தை தன் வலைப்பூவிலும் பதித்துள்ளார்,
  மீண்டும் நன்றி,
  உங்களின் பதிவையும், ரவிக்குமார் பதிவையும் இந்தப் பதிவில் இணைத்துள்ளேன்,

  ReplyDelete
 9. //அதே பதில்தான் தோன்றுகிறது..
  நல்ல முயற்சி...
  வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்//

  வருகைக்கும், கவனத்திற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி மோனி.

  ReplyDelete
 10. //சார் இப்பதான் பதிவை பார்க்கிறேன்..நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெகு குறைவு .. இந்த பணத்தில் அவர்கள் மீட்டிங் போடத்தான் சரியாக இருக்கும் ... //

  நன்றி செந்தில், உண்மையிலேயே எந்த அளவிற்கு முடியும் என்ற முயற்சி, அவ்வளவு தான் . . .

  ReplyDelete
 11. //good thought! //

  நன்றி பிரதீப்

  ReplyDelete
 12. நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா. நாமும் கட்டாயமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டுகிற பதிவு.....நன்றி .நானும் முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 13. முதல் வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி, முயற்சி செய்து பார்க்கலாம் என்று தான்,

  ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது