மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Sunday, September 12, 2010

என்னோட ராவுகள் . . .

நெறைய மதுரக்காரங்க, மதுரைய பத்தி (முக்கியமா மதுர 'நைட்ட') எழுதுனதுல, எனக்கும் ரங்கராட்டினம் (எத்தன நாள் தான், கொசுவத்தி, சைக்கிள் சுத்துறது, மாமு கண்டுக்காதீங்க . . .) ரிவர்சுல சுத்திடுச்சு . . . நிறுத்த முடியலியே, அப்பறம் என்னாச்சுன்னா . . . இந்தப் பதிவு (கிழிஞ்சது போ ன்னு சொலறது காதுல கேக்குது) . . .

நானும் யோசிச்சு, யோசிச்சு பாக்குறேன், 'அது ஒரு கனாக்காலம்' எப்ப ஆரம்பிச்சதுன்னு சரியாத் தெரியல . . .

இருந்தாலும், 'அவளோட ராவுகள்' பார்த்து (போஸ்டரத் தான் ன்னு சொன்ன நம்பவா போறீங்க ?!!) நின்னத, வீட்ல யாரோ போட்டுக்கொடுக்க, தெனோம், ஒழுங்கா ஸ்கூலுக்கு போகும் போது வழிய மட்டும் பாத்துப்போன்னு சொல்ல ஆரம்பிச்சத . . . ஒரு வழியா காலேஜு தர்ட் இயற் படிச்சு முடிச்ச உடனே நிறுத்திட்டாங்க (அதுக்கு மேல சொல்ல முடியல, ஏன்னா . . . படிக்கிறதுக்கு வெளியில போயிட்டோம்ல)

அப்பாடா, அவளோட ராவுகள்ள இருந்து, என்னோட ராவுகள் ஞாபகத்துக்கு வந்துர்ச்சு . . .
கிட்டி புல்லு, குண்டு, பூந்தா, படமாட்டே, சைன் வெளி (பம்பரம்), அப்படி பாலரெங்கபுரத்துல போயிகிட்டிருந்த பொழுதுல, பத்தாவது படிக்கிற வரைக்கும் நைட் ஸ்டடிக்கு அவசியம் வரல (அப்பிடின்னா ஒழுங்கா படிச்சிட்டிருந்ததா . . . அர்த்தம்),

பத்தாவது லீவுல வயசுக்கு வந்து (அதாங்க, கைலி ஒரு வழியா கட்டத் தெரிஞ்சுகிட்டு . . .), அப்பவும் விடாம பூந்தா வெளையாடி, தெரு சண்டையெல்லாம் போட்டு, ஒரு வழியா . . . குவாட்டர்லி , பரிச்ச தேதி சொன்ன உடனே, படிக்கனும்ன்னு பல நாளு, சந்து முக்குல, காலியா இருக்கிற பல வீட்டு திண்ணையில . . . முடிவெடுத்து . . . மதியம் எக்ஸ்ட்ராவா தூங்கி , ஒரு நல்லா நாள்ல நைட்டு பத்து மணிக்கு மேல . . . படிக்கிறதுக்கு நாங்க எல்லாரும் வெளியில வந்துட்டோம் . . .

படிச்சோமா இல்லையான்னு தெரியாது . . . படிக்கிறது கஷ்டம்னு மட்டும் தெரிஞ்சுது . . .
சரி, நடுவுல தூக்கம் வந்துரக் கூடாதுல்ல . . . அதனால, மறக்காம டீ காசு கேட்டு வாங்கிக்குவோம் (ரெகுலரா, எது செய்றியோ இல்லையோ இத மட்டும் கரக்டா கேளுங்க்ரத கேட்டு, கேட்டு . . . மறத்துப் போச்சு . . . இருந்தா மட்டும் ரொம்பத் தான் சொரணை . . . ?!!!)

ஒரு வழியா, பதினொரு மணிக்கு, டீ சாப்புட, லோகு கட, போக ஆரம்பிச்சது . . . அப்பிடியே, முனிச்சால முக்கு, தினமணி டாக்கீஸ்ன்னு எக்ஸ்டெண்டாச்சு . . . அப்பறமென்ன . . . பருத்திப் பாலு, சில நேரம் புரோட்டா சால்னா, பிட்டு, இட்லி . . . சாப்பாடு மட்டும் கூடிக்கிட்டே போச்சு . . . கூடவே, படிக்க வேண்டிய பாடமும் . . .
எக்ஸாம் முன்னாடி, எப்டியோ பாஸ் பண்ற லெவலுக்கு தேத்திருவோம் (பிட்டத் தான்)
ஒரு வழியா காலேஜு வந்த ஒடன, புது குரூப்பு, இப்ப கொஞ்சம் தைரியம் வந்துருச்சு . . .

தினமணி டாக்கீஸ் வரைக்கும் இருந்தது . . . டைரக்சன் மாறி, மிசன் ஹாஸ்பிடல், அப்படியே, பழைய மாகாளிப் பட்டி ரோட்டுக்கு எதுத்தாப்புல இருக்கிற அண்டர் கிரவுண்டு கடன்னு . . . ஏன்னா, சமூகத்துல சில பேரு, பொக போட்டு கொசுவ வெரட்டுற அரும்பணிய கையில எடுத்திருந்தாங்க . . . அவங்க பாதுகாப்பு கருதி அண்டர் கிரவுண்டு தான் இனிமேன்னு பஞ்சாயத்து பைசலாச்சு . . . ஆனா யாரையும், கம்பெல் பண்ண மாட்டோம்,

ஒரே ஒரு வார்த்த சொல்லுவோம்,

"மாமு, உன்னைய தம்மடிக்க கூப்ட்டா தப்பு, வர்றதுக்கு என்னடா ? கேடு . . . இந்த மயித்துக்கு நீ வீட்லயே படிச்சிர்க்கலாம்ல . . . ",

அதுக்கப்பறமும், வரலன்னா, அவேன் மதுரக்காரனே கெடையாது . . . !!!


இப்பிடியே, படிச்சு (??!!!), காலையில ரெகுலர், அன்னைக்கு மதியமே ஒரு அரியர், அதுக்கு அடுத்த நாள் காலையிலேயே, ஒரு ரெகுலர்ன்னு எழுதி பாஸ் பண்ணிட்டோம்ல . . .

அப்பறம், அந்தக் கும்பல்லயும், கும்மி அடிக்காம, படிச்சவங்க மேல படிக்கப் போக, எனக்கும் கலைவாணி அருள் கெடைக்க, நானும் மேல படிக்க (?!!!) கெளம்பிட்டேன் . . .

என்னைக்காவது ஊருக்கு வரும் போது எப்பவாவது, நைட்டு பத்து மணிக்கு மேல பட்டரைய போட்டோம்ன்னா . . .

பஸ் ஸ்டாண்டு, அங்க இங்கன்னு சுத்தி, வீடு வந்து சேரம் போது . . . காலையில மணி அஞ்சாயிர்க்கும் . . .

தூக்கத்துலயும் . . . கரக்ட்டா சொல்வாங்க . . . அப்படியே ரயில்வே ஸ்டேஷன்லயோ, பிளாட்பார்ம்லையோ செட்டில் ஆயிட்டீன்னா . . . சாப்பாடு, தங்குறது எல்லாமே மிச்சம்னு . . . வழக்கம் போல பேசாம போயி படுத்துற வேண்டியது தான் . . .

இப்படியே, ஒரு பத்து, பன்னெண்டு வருஷம் 'என்னோட ராவுகள்' இருந்துர்க்கு . . .
இன்னைக்கு, மதுரையே மாறிடுச்சுன்னு மதுரை சரவணன் எழுதி இருக்கிறதப் பாக்கும் போது . . . மேல சொன்னதெல்லாம் நெசந்தானான்னு தோணுது . . .

இதுக்கு தான் மாப்ள, நம்ம எல்லாம் ஊர்லையே இருந்துர்க்கனும் . . .

என்ன செய்ய எல்லாம் நேரப் ... ட ... ?

25 comments:

 1. காமெடியா இருந்திச்சு சார்!

  ReplyDelete
 2. வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 3. //அதுக்கப்பறமும், வரலன்னா, அவேன் மதுரக்காரனே கெடையாது . . . !!!//

  அப்பவே "நானும் மதுரை காரன் தாண்டா" -நு டயலாக் விட்டிங்களா ...?

  ReplyDelete
 4. //"நானும் மதுரை காரன்தாண்டா"//

  எப்பன்னு தெரியல, ஆனா அடிக்கடி,

  "அடியேய், நாங்க மதுரக்காரங்கடி" ன்னு சவுண்டு வுட்றது மதுரைய விட்டு வெளியில வந்த வொடனே அதிகமாய்டுச்சு . . .

  அதக் கேட்டவொடன "மாப்பு, இதுக்கு மட்டும் கொறச்சல் இல்லடாம்பாய்ங்க, அது செரி, அருவ எங்க, அப்பிடிம்பாய்ங்க"

  வெட்டி பேச்சுக்கு கத்துத் தரணுமா . . .

  ReplyDelete
 5. அருமையா இருந்துச்சு சார், அவள் ராவுகள் சாரி உங்கள் ராவுகள் + ரவுசுகள்

  ReplyDelete
 6. மாமு மொத வருகையே உங்க பதிவப் போல கலக்கலா வந்துர்க்கீங்க ... நன்றி மாமு (மதுர பாணியில)

  ReplyDelete
 7. //பழைய மாகாளிப் பட்டி ரோட்டுக்கு எதுத்தாப்புல இருக்கிற அண்டர் கிரவுண்டு கடன்னு . . . //

  வெறும் டீக்கடை தானே .. அப்புறம் என்ன எங்கள மாதிரி இங்கெல்லாமா போயிருக்கப் போறீங்க!!

  ReplyDelete
 8. வாங்கைய்யா, நானே உங்கள வந்து கூப்புடனும்ன்னு இருந்தேன், ஆயிரமிருந்தாலும் நம்பல்லாம் மதுரக்காரய்ங்க, வந்தது ரொம்ப சந்தோஷம் . . .

  //அப்புறம் என்ன எங்கள மாதிரி இங்கெல்லாமா போயிருக்கப் போறீங்க!!//

  எங்க அப்பா சொன்னத, நீங்க சொல்லிர்க்கீங்க, எங்க காலத்துல மகால சுத்தி கேட்டு போட்டு உள்ள போக முடியாது . . . பந்தடி ஏரியாவ கடக்கும் போது 'யூரியா' க்காக ஒதுங்குவோம் . . . அம்புட்டுதான்

  ReplyDelete
 9. படிச்சோமா இல்லையான்னு தெரியாது . . . படிக்கிறது கஷ்டம்னு மட்டும் தெரிஞ்சுது . . .  .......இத்தனை கும்மி அடிச்சு சுத்தின்னாலும், கரெக்ட்டா இந்த வாழ்க்கை பாடம் தெரிஞ்சுக்கிட்டீங்களே, பாஸ்.....!!!

  (p.s. Thank you for inviting me to visit your blog.)

  ReplyDelete
 10. இப்பிடியே, படிச்சு (??!!!), காலையில ரெகுலர், அன்னைக்கு மதியமே ஒரு அரியர், அதுக்கு அடுத்த நாள் காலையிலேயே, ஒரு ரெகுலர்ன்னு எழுதி பாஸ் பண்ணிட்டோம்ல . . .////

  சேம் பிளட்

  ReplyDelete
 11. //.......இத்தனை கும்மி அடிச்சு சுத்தின்னாலும், கரெக்ட்டா இந்த வாழ்க்கை பாடம் தெரிஞ்சுக்கிட்டீங்களே, பாஸ்.....!!!//

  தெரிஞ்சதுன்னு தைரியமா சொல்றதுக்கு இது ஒன்னு தாங்க இருக்கு . . .

  //(p.s. Thank you for inviting me to visit your blog.)//

  அட இது நல்ல பண்பாடா இருக்கே, சின்ன கமெண்டுன்னாலும், அதுலயும் ஒரு விஷயத்த வச்சு கலக்குறீங்க பாஸ்,
  வந்ததுக்கும், சொன்னதுக்கும், நல்ல விஷயத்துக்கும் ரொம்ப நன்றி மக்கா . . .

  ReplyDelete
 12. //சேம் பிளட்//

  அது எப்படிங்க, ஒலகத்துல எங்க இருந்தாலும், நம்மள மாதிரி ஆட்கள் கரக்ட்டா சேர்ந்துர்றோம் . . .

  வந்ததுக்கு நன்றி அமைச்சரே

  ReplyDelete
 13. அன்பின் மார்க்கண்டேயன்

  அருமை அருமை ரங்க ராட்னம் சூப்பர்

  ஆமா மதுரக்காரன்ன உடனே ஓடி வந்து படிச்சுட்டேன் - நான்னும் அந்தக் காலத்துல 1963-1972 சுத்தோ சுத்துன்னு சுத்தின கத எல்லாம் எழுதியிருக்கேன்ல - அப்பா நெனெச்சுப் பாத்தா மகிழ்ச்சியா இருக்கு.

  நல்வாழ்த்துகள் மார்க்கண்டேயன்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 14. //நட்புடன் சீனா//

  நீங்க வந்தது, ரொம்ப சந்தோஷம்ங்க . . .

  உங்க வீட்டுக்கு வந்து படிக்கிறேங்க

  நல்ல வேள இத எல்லாம் நம்ம ரெக்கார்ட் (??!!!) பண்ணிட்டோம் . . .

  ஒரு காலத்துல இந்த மாதிரி எல்லாம் இருந்துர்க்குன்னு அடுத்த தலமுற காரங்க புக்கு போடறதுக்கு வசதியா இருக்கும் (???!!!),

  இன்னைக்கி மதுர நைட்டு மாறிடிச்சு . . .

  உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும், அன்பிற்கும் . . . வணக்கமுங்க

  ReplyDelete
 15. அப்பறம், அந்தக் கும்பல்லயும், கும்மி அடிக்காம, படிச்சவங்க மேல படிக்கப் போக, எனக்கும் கலைவாணி அருள் கெடைக்க, நானும் மேல படிக்க(?!!!) கெளம்பிட்டேன்
  yaarunga adu kalaivani??? ;)apram neenga avaloda raavugal poster MATTUM thaan paartheenganu nambitaen... Inga Pisa la inda maduraikarar yenna panreenganu oru padhiva podunga... authentic Madurai post :) vazhthukkal... Priya

  ReplyDelete
 16. வாங்க ப்ரியா, வாங்க,

  //yaarunga adu kalaivani??? ;)//

  நானும் தேடிட்டு இருக்கேங்க, பாத்தவொடன கண்டிப்பா சொல்லிடுறேன் . . .

  //nambitaen... //

  அப்பாடா, நீங்களாவது நம்புனீங்களே !!!

  அதுவும் வருமுங்க

  வந்தது சந்தோஷம், ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 17. Arumai.....Ellam OK ana onnu missing!!! Friend veetle night study innu sollittu Alankar theatre poi moottai poochi kitte kadi vangi kitte padam paththathe vittuttiye...
  "Pala Ninaivu ithalhzgal malarnthathil oru ithalhz malaravillai"

  -Prakash

  ReplyDelete
 18. அட பிரகாஷு, உன்னைய தான்யா தேடிகிட்டு இருந்தேன், ரெகுலரா செஞ்ச கூத்த மட்டும் எழுதிர்க்கேன், அப்பப்ப (வாரம் ஒரு தடவ, பதினஞ்சு நாளுக்கொருதடவ) செஞ்சதெல்லாம் எழுதினா நாடு தாங்காது . . .

  ReplyDelete
 19. அன்புள்ள மார்கண்டேயனுக்கு,

  என் வலைபூவுக்கு வந்தமைக்கு நன்றி. உங்கள் வலைபூவை கவனித்தேன் நன்றாகவும் வேடிக்கையாகவும் எழுதுகிறீர்கள். என் 'ட்ரேடு', 'கால்கள்' போன்றவை சிறிய கதைகள். வலைபூவிலே உள்ளன படித்துபாருங்கள்.

  உங்களுக்கு செளராஷ்ர மொழியின் லிபியை படிக்கவும் எழுதவும் தெரியுமென்பது சற்று ஆச்சரியமளிக்கிறது. அந்த மொழி இப்பொழுது பயன்பாட்டில் இல்லை என நினைத்துக்கொண்டிருந்தேன். செளராஷ்ர மொழியின் எழுத்து, வரலாறு சம்பந்தமாக தமிழில் நூல் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்.

  நன்றி.
  கே.ஜே. அசோக்குமார்.
  Kjashokkumar.blogspot.com

  ReplyDelete
 20. மதிப்பிற்குரிய அசோக்குமாருக்கு,

  உங்கள் வலைப்பூ பற்றிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி, கண்டிப்பாக படித்து விட்டு தகவல் சொல்கின்றேன்,

  //உங்களுக்கு செளராஷ்ர மொழியின் லிபியை படிக்கவும் எழுதவும் தெரியுமென்பது சற்று ஆச்சரியமளிக்கிறது.//

  இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது, தாய்மொழியில் எழுதத் தெரியவில்லை என்றால் தான் ஆச்சர்யப்பட வேண்டும், இன்று ஸௌராஷ்ட்ர மொழி இணைய வாயிலாக எழுதவும் படிக்கவும் ஏற்புடயவாறு கொடுக்கப்பட்டுள்ளது,

  www.youtube.com (Sourashtra Language Lessons, Sourashtra Akshar. . . This gives the history and development of Sourashtra language with description in Sourashtra), www.palkarblogs.com (This is the website from where you can learn Sourashtra language), http://Sourashtra.info (From where you can get Sourashtra fonts and Vishwa Sourashtram - First International Journal in Sourashtra)

  போன்ற பல்வேறு இணைய தளங்கள் மூலம் ஸௌராஷ்ட்ர மொழியை நீங்கள் சுயமாக கற்க முடியும்,

  வருத்தம் என்னவெனில், யாரும் முயற்சி செய்வதில்லை,

  உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றேன்,

  //செளராஷ்ர மொழியின் எழுத்து, வரலாறு சம்பந்தமாக தமிழில் நூல் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்.//

  உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன், தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் தருகின்றேன்.

  வருகைக்கும், கருத்துக்கும், கற்கும் ஆர்வத்திற்கும் நன்றி, வணக்கத்துடன்.

  ReplyDelete
 21. நல்லாவே சுத்திருக்கீங்க மார்கேண்டேயன்...

  ரங்க ராட்னத்தையும், மதுரையையும்....

  நல்ல நினைவுகள்.

  ReplyDelete
 22. நன்றி கமலேஷ்,

  //நல்ல நினைவுகள்//

  ஆமாங்க, எப்ப நெனச்சாலும் உண்மையான்னு தோணுது, அந்த அளவுக்கு, காலமும் மாறிடுச்சு, மதுரையும் மாறிடுச்சு . . . என்ன செய்ய . . . .

  ReplyDelete
 23. வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
  வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


  சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
  சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
  பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

  ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது