பிடித்தாலும், நிறுத்த நினைத்தாலும்,
நிற்காமல் புதிது புதிதாய்,
பதிகின்ற காலச்சுவடுகள்,
எப்போழுதென்றே தெரியவில்லை . . .
ஆரம்பம்,
முதல் சுவடு எது,
கடைசி பதிப்பு எது,
விடையில்லா தொடர்கதை,
எங்கேயோ, எப்பொழுதோ,
விட்டதோ, தொட்டதோ,
யார் யாரோ,
அனைத்தும் ஒன்று விடாமல்,
மறதி மறந்து
மனம் நின்றுகொண்டிருந்தாலும்,
காலச்சுவடுகள் மட்டும்
நிற்காமல்
அடுத்த பதிவை நோக்கி . . .
நன்றி, வார்ப்பு.
உண்மை தான் நண்பா ....
ReplyDeleteஇன்று சுனைனா ,நேற்று ஷோபனா,காலசுவட்டில் நாளை யாரோ ...
ரொம்ப அருமையான கவிதை நண்பா....
நன்றி நண்பரே,
ReplyDelete//நாளை யாரோ ...//
அந்த அதிர்ஷ்டம் யாருக்கென்று காலச்சுவட்டில் பதியாமலா போய்விடும் ?
//வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது//
ReplyDeleteகவிதை வரிகள் அருமை. ரசித்தேன். நன்றி.
க. சுரேந்திரன்
அகம் புறம்.
///இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது///
ReplyDeleteஅட நல்லா இருக்கே.... கவிதையை தாங்க சொன்னேன்...
//வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ReplyDeleteகவிதை வரிகள் அருமை. ரசித்தேன். நன்றி.
க. சுரேந்திரன்
அகம் புறம். //
நம்பிவிட்டேன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
///இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ReplyDeleteஅட நல்லா இருக்கே.... கவிதையை தாங்க சொன்னேன்... ///
நம்பிட்டேங்க, மொத தடவ வந்துர்க்கீங்க, படிச்சிர்க்கீங்க, கருத்து சொல்லீர்க்கீங்க, நெம்ப நன்றிங்க