நான் இறந்து போயிருந்தேன் . . .
நிராகரிப்பின் நீச்சிகள்
நீளும் தருணங்களிலெல்லாம்
உடலெரிந்து பின்னிருக்கும்
சாம்பல் துகள்கள்
காற்றில் பறப்பதைப்போல்
நான் இறந்து போயிருந்தேன்
எறிந்த தரை இருப்பது போல
உயிர் இருந்தும் . . .
ஞானக் கணக்கை
நேர் செய்ய
பலரால் பல வழிகளில்
'நான்' இறந்து போயிருந்தேன் . . .
ஞானக் கண் மட்டுமேனோ
இன்னும் திறப்பதற்கு வழியேயில்லை ?!!
தாய்ப்பால் தடை செய்யப்பட்ட
காலம் தொட்டு
பால்யத்தில் கரம் பிடித்தவளின்
பிரிவு உட்கொண்டு
கணக்கற்ற தடவை
நான் இறந்து போயிருந்தேன் . . .
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
இறப்பும் பிறப்பும்
பள்ளித் தேர்வில் தவறிய போது
கல்லூரித் தகுதி அடையாதபோது
இன்னும் எத்தனையோ . . .
புதிது புதிதாய் . . .
'நான்' மட்டும் மாறாமல்
இருகோட்டுத் தத்துவமாய்
இறந்து கொண்டேயிருக்கின்றேன் . . .
இத்தனை முறை
மீள்த்துயிர்ந்தாலும்
இறுதி மூச்சு உள்ளவரை . . .
உதிரம் உளுத்துப் போகும் வரை
இனி மாற்ற முடியாத
இறுதிக்கோடாய்
இயல்பாய் இவனுள் சென்றவளை
இதயமறுத்து ஈருடலாய்
மெய்பித்தபோது . . .
வக்கற்றவனாய் . . .
கடைசியாய், உயிரோடு
நான் இறந்து போயிருந்தேன் . . .
இனிமேல் மீள முடியாமல்
இது திரு. கார்க்கி அவர்களின் வலைப்பூவில் பாரத் பாரதி அவர்கள் பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 'நான் இறந்து போயிருந்தேன் . . .' சவால் கவிதைப் போட்டிக்காக எழுதியது.
இக்கவிதையை 'திண்ணையில்' அமரச் செய்தமைக்கு என் அன்பான நன்றிகளை அளிக்கின்றேன்.
அருமையான கவிதை நண்பா ....கலக்குங்க ...
ReplyDeleteஅருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteகவிதையின் நடை நன்றாக கை வந்திருக்கிறது..
இதனை எங்கள் http://bharathbharathi.blogspot.com தளத்திலும் வெளியிட்டுள்ளோம்..
எமக்கு பிடித்த வரிகள்.....
நான் இறந்து போயிருந்தேன் . . .
நிராகரிப்பின் நீச்சிகள்
நீளும் தருணங்களிலெல்லாம்
உடலெரிந்து பின்னிருக்கும்
சாம்பல் துகள்கள்
காற்றில் பறப்பதைப்போல்....
ஞானக் கணக்கை
நேர் செய்ய
பலரால் பல வழிகளில்
'நான்' இறந்து போயிருந்தேன் . . .
ஞானக் கண் மட்டுமேனோ
இன்னும் திறப்பதற்கு வழியேயில்லை ?!!
Nice One
ReplyDeleteமிக அருமையாக உள்ளது!
ReplyDeleteசவாலான கவிதைதான்.
ReplyDeleteதாமாதமான கவனத்திற்கு நண்பர்கள் பொறுத்தருளவேண்டும் . . .
ReplyDeleteதொடர்ந்த வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி தனி காட்டு ராஜா
பாரத் பாரதி . . . இப்போட்டியை நிர்வகித்தமைக்கு மிக்க நன்றி, மேலும் தங்கள் தளத்தில் வெளியிட்டது மிகுந்த ஊக்கமளிக்கிறது
நன்றி தங்கமணி
தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி எஸ். கே.
ஆம் ஜெகதீஸ்வரன், சவாலில் பங்கு பெற்றுள்ளேன் . . . பார்ப்போம் . . .