அந்நிய தேசமது
அகலாத இரவின் நீட்சி
அதிகாலைப் பொழுது
ஆழ ஊடுருவும் குளிர்
அழுத்தம் கொடுக்கும் வயிறு
அடித்து எழுப்ப
அவசரமாக அவ்விடம் ஓட . . .
அங்கே அழகி ஒருத்தி
அவ்வேளையிலும்
அழகாக்கிக் கொண்டிருந்தாள்
அலுங்காமல் அசிங்கமாக்குமிடத்தை
அவசரமறிந்து பார்த்தாள்
அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தாள்
அவசரமாய் கதவடைத்து
அழுத்தம் அகற்றுகிறேன்
அலுக்காமல் நின்றவள்
அமைதியாய் தொடர்கிறாள், தான்
அனுதினம் செய்யும் பணியை
அடிமனதில் ஏதோ ஒன்று அறுக்க
அங்கிருந்து அன்பு பிறக்க
அவளின் கண்களுக்கு கொடுக்க
ஆறுதலாய் ஏற்றுக்கொண்டு
அவள் வேலையை தொடர்கிறாள்
ஆயிரம் மொழிகளுக்கு அடிப்படையான
அன்பெனும் மொழியை உணர வைத்த
அழகு மொழியாள்(ழ்)
இக்கவிதையை 'திண்ணையில்' அமரச் செய்தமைக்கு என் அன்பான நன்றிகளை அளிக்கின்றேன்.
அன்பெனும் மொழியை உணர வைத்த
ReplyDeleteஅழகு மொழியாள்(ழ்) // அழகான வரிகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
நமது நாட்டில் தான் தொழிலை வைத்து மனிதர்களை எடை போடுகிறோம் ....
ReplyDeleteநல்ல கவிதை நண்பா ...
Nice one
ReplyDeleteதொடர்ந்த வருகைக்கும், ஊக்கங்களுக்கும் மிக்க நன்றி, எஸ் கே மற்றும் அ த,
ReplyDelete//தொழிலை வைத்து//
சில தொழில்களை பற்றிய சீழ் பிடித்தச் சிந்தனை இன்னும் நம் மனதிலிரிந்து விலகவில்லை என்பது உண்மை
இதைத் தாண்டி,
முதலில் பணம், அது சரி சமமாக இருவரிடம் இருந்துத் தொலைத்துவிட்டால், பிறகு, (சா)பேதி, (ம)குலம்,
(மூ)சாத்திரம், தொழில் என்று முடிந்த அளவில் பிரிவினை பார்ப்போம்,