மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Monday, May 31, 2010

என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகள்

சுயம் தேடும் பறவையாக . . .
என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகளிலிரிந்து
எப்பொழுதாவது என்னை மீட்டெடுக்கிறேன்
மீட்டெடுக்கும் தருணங்களில் . . .
மீதமுள்ள வாழ்க்கையின்
வாக்கியங்கள்
நிகழ்கால நிஜங்களால்
முற்றுப்பெறாமல்...
நீரோடையில் மிதக்கும் தக்கையாக . . .

நன்றி., வார்ப்பு இணைய இதழுக்கு.

7 comments:

  1. Karuthum, varikalum arumaiyaga ulladhu.

    ReplyDelete
  2. தங்களின் தொடர்ந்த வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் கருத்துரைகளுக்கும் கனிவான நன்றி,
    சிறு வேண்டுகோள்: தங்கள் எண்ணங்களை தமிழிலேயே தந்தால் தகைமை வாய்ந்ததாக இருக்கும்,

    ReplyDelete
  3. மிகவும் அழகாக எழுதுகிறீர்கள் நண்பரே...
    வாழ்த்துக்கள்..
    உங்களின் பயணங்களை தொடருங்கள்...

    ReplyDelete
  4. உங்களின் வருகை மூலம் உங்கள் நலம் மேம்பட்டிருக்கும் என்று நம்புகின்றேன், உங்களின் ஊக்கங்களுக்கு உளம்கனிந்த நன்றி . . . தங்களின் பயணத்தில் அடுத்த படியை எதிர்நோக்கி

    ReplyDelete
  5. தலைப்பே ஆயிரம் சிந்தனைகள் தருகிறது!

    ReplyDelete
  6. உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ஆயிரமாயிரம் சிந்தனைகளில் அமைக்க முடியாமல் முயன்று கொண்டே இருக்கும் ஒரு சிந்தனை தான் இது . . .

    ReplyDelete
  7. 'தலைப்பே ஆயிரம் சிந்தனைகள் தருகிறது!'

    தலைப்பிற்கு சொந்தக்காரர்கள் வார்ப்பு குழுவினர், www.vaarppu.com

    ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது