மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Monday, May 3, 2010

காதலுற்றேன்....

காதலுற்றேன்....

ஈன்றவள் ஈந்ததோ ?
இல்லை . . .
தகப்பன் தந்ததோ ?
இல்லை . . .
உறவுகள் உணர்த்தியதோ ?
இல்லை . . .
உற்றார் உரைத்ததோ ?
இல்லை . . .
நட்புகள் நவின்றதோ ?
இல்லை . . .
பால்ய வயதின் பழக்கமோ ?
இல்லை . . .
பள்ளியில் பயின்றதோ ?
இல்லை . . .
பருவ வயதில் படர்ந்ததோ ?
இல்லை . . .
பல்கலையில் படித்ததோ ?
இல்லை . . .
பல பிறப்பில் பதிந்ததோ ?
இல்லை. . .

பின் எப்போது காதலுற்றேன்..
உன்னைக் கண்டவுடன் காதலென்று சொல்ல . . .?

உன்னை நான் கண்ட நாள் முதல் காதலுற்றேனா ?
இல்லை.. நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா ?

எனக்குள் காதல் இருந்ததால் காதலுற்றேனா ?
இல்லை . . .

உன் காதலால் காதலுற்றேனா ?
இல்லை . . .

கருவுற்றபோதே காதலுற்றேனா ?
இல்லை . . .

காதலுற்றதால் கருவானேனா ?
இல்லை . . .

. . . நான் எப்போது காதலுற்றேன் ?

மலர்ந்த நாள்: ஸௌராஷ்டிர விஜயாப்தம் 698, முதல் மாதம் 20 ம் தேதி.


நிலாச்சாரலில் கவிதையை காண கீழே சொடுக்கவும்,


நிலவின் குளுமையோடு, நிலாச்சாரலில் நித்தம் நிலைக்கச்செய்த நிலாச்சாரல் குழுவினரக்கு நிறைந்த நன்றி,

5 comments:

 1. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  ReplyDelete
 2. ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. தங்கள் வருகைக்கும், வார்த்தைகளுக்கும் வளம் சேர்க்கும் நன்றிகள் கமலேஷ்

  ReplyDelete
 4. நல்ல ஆளை பார்த்து கதலுற்றால் சரி

  ReplyDelete
 5. தங்களின் தொடர்ந்த வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி ஈஸ்வரி,

  ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது