மதிப்பிற்குரியோரே,
மார்கண்டேயனின் மலர்ச்சோலைக்குள் நான்காவது மலராய் வந்திருப்பவர்,
'சதையானவள்',
திண்ணையில் திண்மையுடன் வீற்றிருக்கிறார் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004184&format=html),
இவரை இணையத் திண்ணையில் இருக்க இடம்கொடுத்த திண்ணையில் அமர்ந்து தமிழ்த் திறன் செய்யும் திண்ணை (www.thinnai.com) குழுவினருக்கு திவ்யமான வணக்கம்,
திண்ணையில் அமர்ந்த நாள்: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் 698, முதல் மாதம், ஐந்தாம் தேதி.
சதையானவள் . . .
ஜாதி இல்லை மதமும் இல்லை,
காதல் இல்லை காமம் இல்லை,
வாலிபம் தொலைந்தது நினைவில்லை,
வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை,
. . .
இச்சையின் பிச்சை பசி போக்க,
எச்சிலால் தாகம் தீர்க்க,
வியர்வையின் வீச்சங்கள் விசிறி வீச,
. . .
குடிகெட்ட(கெடுத்த)குறிகளாலே,
குறிகளின் குறிக்கோள்களுக்கென்றே,
குமைந்து போன வாழ்க்கையில்,
சதையென்ற சவமாகி,
சதையாலே 'சமாதி' அடைந்திட்டோமே ...
மார்கண்டேயன்.
உங்கள் கவிதைகளின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள தனியா வகுப்புகளுக்கு போகணும் போல..
ReplyDelete//ஜாதி இல்லை மதமும் இல்லை,
காதல் இல்லை காமம் இல்லை,
வாலிபம் தொலைந்தது நினைவில்லை,
வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை,//
இது ஏதோ கொஞ்சம் புரியுது
மற்ற வரிகள் ஒன்றுகொண்டு தொடர்புடையனவா அல்லது தனி தனி கவிதைகளா?
தயவு செய்து word verification என்கிற option ஐ எடுத்து விடுங்கள்.தவறான அல்லது தேவையற்ற பின்னூட்டங்களை மட்டுப் படுத்த இது உதவாது.
ReplyDeleteதங்களின் வருகைக்கு மனமார்ந்த நன்றி.,
ReplyDeleteதாங்கள் தங்கள் உள்ளம் எனும் வகுப்பினுள் (உள்) சென்றால் கேள்விகளுக்கு (பதில்)உரை கிடைக்கும்,
தாங்கள் உரைத்தபடிய உரைப்பதில் உரிய திருத்தம் செய்கின்றேன்.