மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Wednesday, April 21, 2010

சதையானவள் . . .

மதிப்பிற்குரியோரே,

மார்கண்டேயனின் மலர்ச்சோலைக்குள் நான்காவது மலராய் வந்திருப்பவர்,

'சதையானவள்',

திண்ணையில் திண்மையுடன் வீற்றிருக்கிறார் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004184&format=html),

இவரை இணையத் திண்ணையில் இருக்க இடம்கொடுத்த திண்ணையில் அமர்ந்து தமிழ்த் திறன் செய்யும் திண்ணை (www.thinnai.com) குழுவினருக்கு திவ்யமான வணக்கம்,

திண்ணையில் அமர்ந்த நாள்: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் 698, முதல் மாதம், ஐந்தாம் தேதி.

சதையானவள் . . .

ஜாதி இல்லை மதமும் இல்லை,
காதல் இல்லை காமம் இல்லை,
வாலிபம் தொலைந்தது நினைவில்லை,
வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை,

. . .

இச்சையின் பிச்சை பசி போக்க,
எச்சிலால் தாகம் தீர்க்க,
வியர்வையின் வீச்சங்கள் விசிறி வீச,

. . .

குடிகெட்ட(கெடுத்த)குறிகளாலே,
குறிகளின் குறிக்கோள்களுக்கென்றே,
குமைந்து போன வாழ்க்கையில்,
சதையென்ற சவமாகி,
சதையாலே 'சமாதி' அடைந்திட்டோமே ...

மார்கண்டேயன்.

3 comments:

  1. உங்கள் கவிதைகளின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள தனியா வகுப்புகளுக்கு போகணும் போல..
    //ஜாதி இல்லை மதமும் இல்லை,
    காதல் இல்லை காமம் இல்லை,
    வாலிபம் தொலைந்தது நினைவில்லை,
    வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை,//
    இது ஏதோ கொஞ்சம் புரியுது

    மற்ற வரிகள் ஒன்றுகொண்டு தொடர்புடையனவா அல்லது தனி தனி கவிதைகளா?

    ReplyDelete
  2. தயவு செய்து word verification என்கிற option ஐ எடுத்து விடுங்கள்.தவறான அல்லது தேவையற்ற பின்னூட்டங்களை மட்டுப் படுத்த இது உதவாது.

    ReplyDelete
  3. தங்களின் வருகைக்கு மனமார்ந்த நன்றி.,
    தாங்கள் தங்கள் உள்ளம் எனும் வகுப்பினுள் (உள்) சென்றால் கேள்விகளுக்கு (பதில்)உரை கிடைக்கும்,

    தாங்கள் உரைத்தபடிய உரைப்பதில் உரிய திருத்தம் செய்கின்றேன்.

    ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது