மார்க்கண்டேயனின் மனதில் மலர்ந்த படத்திற்கான பதிவு, ஒரு குறுங்கவிதையாக வார்க்கப்பட்டுள்ளது
தொலைந்துபோன ஒற்றைப் பாதணி
உனக்கென்ன . . .
ஒற்றை பாதணி தொலைத்தபோது, மிஞ்சிய
ஒற்றை பாதணியை பத்திரப்படுத்திவிட்டாய்,
அன்றைத் தொலைந்த என் இதயம் மட்டும்,
இன்னும்,
தொலைந்து போன ஒற்றை பாதணியாய் . .
மலர்ந்த நாள்: ஸௌராஷ்டிரா விஜயாப்தம் 698, முதல் மாதம், மூன்றாம் தேதி.
என் வரிகளை வார்ப்பில் வார்த்து, வளரச்செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழிய வாழ்த்துகள்,
மார்கண்டேயன், மதுரை, பாரதம்
//உனக்கென்ன . . .
ReplyDeleteஒற்றை பாதணி தொலைத்தபோது, மிஞ்சிய
ஒற்றை பாதணியை பத்திரப்படுத்திவிட்டாய்//
எதுக்கு? சுவற்றில் மாற்றி வைக்கவா?
//அன்றைத் தொலைந்த என் இதயம் மட்டும்,
இன்னும்,
தொலைந்து போன ஒற்றை பாதணியாய் . .//
செருப்பு காணாமல் போனா இதயத்தை ஏன் தொலைக்கிறீங்க ...
நிஜமா இந்த வரிகள் எனக்கு புரியலை....
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஈஸ்வரி ...,
ReplyDeleteமுதல் கேள்விக்கான பதிலை பாத்திரப்படுத்தியவரிடம் கேட்டுச்சொல்கின்றேன்.,
இரண்டாவது கேள்விக்கான விடை இதயம் கிடைத்ததும் . . ..