எம் நேசத்திற்குடையீர்,
என்னுயிர்க்கு தோழியாய், துணையாய் நின்றவளை, நிலாச் சாரலலில் நிலவின் குளுமையோடு வைத்துள்ளேன், எம்முயிரை உணர்க . . .
என் உயிர்... (தோழி)
என்னவளே . . .
என்னை எனக்கறிவித்து,
என்னுள்ளே என்னை எழுப்பி,
எனக்கேற்றம் கொடுத்து,
என்னுள் என்னை நிலைக்கச் செய்து,
என்னை எங்கும் நிறைவாக்கி,
என் நெஞ்சைப் பஞ்சாக்கி,
என் வீழ்ச்சிகளை விதைகளாக்கி,
என் வீரத்தை விவேகமாக்கி,
என் எழுத்தை கவிதையாக்கி,
என்னுயிரை உவப்பாக்கி,
என் வாழ்வை வளமாக்கிய,
என்னவளே எப்படியடி
என் எலும்பை சுக்குநூறாக்கி,
என் நெஞ்சை இரண்டாக்கி,
என்னிலிருந்த உன்னை இடம்மாற்றி,
எம்மையும் உம்மையும் உடன்பிறப்பாக்கி,
எம் நினைவை நிர்மூலமாக்கி,
எம்மைப் பேசும் ஊமையாக்கி,
எம் வாழ்வை சிதிலமாக்கி......
. . .
.....
என் கண்ணே எப்படியடி,
என்னை இன்னும் உருக்குலையாமல் வைத்திருக்கிறாய்?
என் கண்ணே எப்படியடி
எம் முன் கலைந்த நேசத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறாய்
என்னுயிர்த் தோழியே நான்
எப்பிறப்பில் செய்த தவமடி நீ?
எம்முயிரின் நினைவுகள் நிலாச்சாரலில், நீங்காமல் நிலைபெற செய்த நிலவு (நிலாச்சாரல்) குழுவினருக்கு,
நித்தம் உரைக்கின்றேன், நிலையான நன்றி,
No comments:
Post a Comment
வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது