மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Wednesday, October 21, 2009

நீ வருவாய்

நீ வருவாய்
நீ வருவாய் என . . .

நீ சென்ற வழியெல்லாம் தேடிப்பார்க்கிறேன்

நீ வந்த வழியெல்லாம் வந்துபோகிறேன்

நீ வாழ்ந்த வாசலில் விழியை விதைக்கிறேன்

நீ வாசம் வீசிய இடங்களிலிருந்து சுவாசம்பெறுகிறேன்

நீ புன்னகை வீசிய இடங்களில் எல்லாம் பூத்துக்குலுங்குகிறேன்

நீ பிரிக்கப்பட்ட இடத்திலிருந்து பிரியமுடியாமல் தவிக்கிறேன்

நீ கொடுத்த நம்பிக்கையால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .

நீ இருந்த இடங்களில் நான் இறந்தும் இருக்கின்றேன்

நீ இல்லாத இடங்களில் நான் இருந்தும் இறந்திருக்கிறேன்

என்ற என் இருப்பை உறுதி செய்ய

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .


மார்கண்டேயன்

அன்புடையீர்,

கவிதையை வாசித்தமைக்கு நன்றிகள் பல,

நான் வார்த்த வார்த்தைகளை வளம் குறையாமல் வார்த்தெடுத்து, என்னை கவிஞர்கள் வரிசையில் அமர்த்திய வார்ப்பு இணையதள குழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்,

இந்த கவிதை கீழ் காணும் வலைத்தொடர்பில் உள்ளது,

http://www.vaarppu.com/view/1946

1 comment:

 1. வணக்கம் மார்கண்டேயன்

  உங்கள் எண்ண அலைகளை மிக அழகாக வடித்து இல்லை இல்லை செதுக்கி உள்ளியீர்கள்.

  மிக அருமையாக உள்ளது. நன்றி

  அன்புடன்
  ப்யாரிலால்

  ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது