முன் நிறுத்தி
முகவரி கொடுத்தேன்
முகவரி பெற்றவன்
முடிவதெல்லாம் தன்னாலென்று
முழுமதியற்று முழங்கினான்
முழங்கிய முட்டாள்
முட்டுக் கட்டையானான்
முடிவெடுக்க விடாமல்
முன் ஏற்றுக் கொண்ட பணிகள்
முடங்கவைத்து
முழுமகிழ்ச்சி கொண்டான்
முடிவதெல்லாம் தன்னால்
முடிவதென்று
முடிவற்ற பிம்பம் கண்டான்
முச்சந்தியில் பிதற்றினான்
முடிந்த இடங்களிலெல்லாம்
முரசடித்தான்
முரசொலி பொறுக்காமல்
மூடச் சொன்னேன் வாயை
மூடன் சொன்னான் வென்றதாய்
முழுதும் அறிந்தவர்
முன் வந்து சொன்னார்
முனகுபவனெல்லாம் முடியாதவர்
முன்னிறுத்துவது முடங்கிவிடுமென்று
முழுதும் உணர்ந்தாலும்
முயற்சிகள் அயர்ந்தன
முடிவெடுத்தேன்
முயற்சியற்றவனை
முன்வைப்பதில்லையென
முடிந்தவரை எதிரிகளை சந்திக்கின்றேன்
முடிவு வரும் காலம் வரை
முழுதுமறிந்த பின் முழங்குகின்றேன் நண்பேன் . . .
இக்கவிதையை திண்மையுடன் திண்ணையில் வீற்றச் செய்த திண்ணை ஆசிரியர்க் குழுவினருக்கு நன்றி.
2011/1/13 Raman E. Siva
அன்புள்ள நண்பரை வலையில் மீண்டும் சந்திப்பதில் மகிழுவகை அடைகின்றேன் ,
நான் தங்களுடைய blog spot ல் மீண்டும் நுழைந்தேன் தங்களுடைய , மூன்று கவிதைகளை வாசித்தேன் , மிகவும் அருமை அதில் எனக்கு சிலகருத்துக்கள் உண்டு.
நல்ல நட்பை வளர்க்க போற்றுதலும் , புகழுதலும் மட்டும் போதாது குறைகளை சுட்டிக்காட்டுவதும் , போதிய விளக்கம் பெறுவதும் அவசியம் என்பதால் இந்த மின்-கடிதத்தை வரைகின்றேன், முதலில், முதலாளித்துவத்தின் சுறண்டல்.
மற்ற இரு கவிதை
நண்பேன் . . . ?!? (மற்றும்) பிரியாத பிரிவுகள்
இந்த இரு கவிதைகளில் அளவுக்கு அதிகமான எதுகைகள் , சில இடங்களில் சுவையை குறைக்கிறது . சில இடங்களில் ( இயற்கையாக அமைந்தாலும் கூட ) ஒரே எழுத்துகளில் வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்றே சேர்த்து இருப்பதாக தோன்றுகிறது .
இதை தாங்கள் கவனத்தில் கொண்டு , ஆலோசிக்க வேண்டுகிறேன் .
இந்த கவிதைகளில் தங்களுடைய நிலைபாட்டையும் , அறிய ஆவல் கொள்கிறேன் .
இப்படிக்கு , தங்கள் "ப்ளாக்" கில் புதிய படைப்புகளை எதிர் நோக்கும் .
வாசகன்
E . சிவராமன்
மதுரை
அன்பின் சிவராமன்,
தொடர்ந்த வருகைக்கும், கருத்தாய்வுக்கும் மிக்க நன்றி,
மறுபடி எழுதும் பொழுது கவனத்தில் கொள்கின்றேன்,
கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளவும்,
நட்புடன்,
மார்கண்டேயன்.
தொடர்ந்த வருகைக்கும், கருத்தாய்வுக்கும் மிக்க நன்றி,
மறுபடி எழுதும் பொழுது கவனத்தில் கொள்கின்றேன்,
கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளவும்,
நட்புடன்,
மார்கண்டேயன்.
கவிதை மிக சிறப்பாக உள்ளது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteDear Suresh,
ReplyDeleteI saw your blog and very good poems. Not only sowrastra even ur tamil is also excellent.
Rgds
laguduva a venkataraj
palay
:)
ReplyDeleteதொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி எஸ். கே., மற்றும் தனி காட்டு ராஜ,
ReplyDeleteஉங்கள் வருகை என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது.
முதல் வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி லகுடுவா வெங்கட்ராஜ்.
ReplyDelete