பிறந்து பின்
பிறப்பில் பிரிக்கும் பிரிவு
பின் பிம்பங்களாய்
பிடித்துக் கொடுக்கப்பட்டு
பிரிவுகள் பலவாய் பிறந்து
பிரிவிற்கான முதலீடை பணத்தால் செய்ய
பிரித்தாளும் ருசி கண்டு
பிறதொரு காரணிகளாய் சாதி, மதம் கை கொடுக்க
பிரித்துப் பார்த்து, பிரித்துப் பார்த்து
பிரிவுகளைக் கூட்டி
பிரிக்கப்பட்டவைகளில் ஒதுங்கி
பிரிந்த சிலவற்றில் சேர்ந்து
பிரிவென்ற சொல்லை மறைத்து
பிரியவில்லை என்ற பிரிய பூச்சு கொடுத்து
பிரிவிலும் மகிழ்ந்து
பிரிவுகள் பலவாய் பெருக்கி
பிரிந்த பிரிவுகள் சில சேர்த்து
பிரிவிலும் பிளவாக்கி
பிரிந்து நின்று, பிறப்பறுக்கும் பிரிவுணர்தவுடன்
பிரிவின் வலி அறிந்து
பிரிவறுத்த பின்னொரு நாளில் மனிதம் பிறக்க
பிரிவில்லையென்று பிதற்ற
பிரித்தவைகளைத் தேடியலைய . . .
பிரிந்திரிந்தது பிரித்தவரின் உடல் . . .
பிரிந்த பிண்டத்தை கண்டு . . .
பிதற்றியது பிரியப்போகும் பிணம்
பிரிவில் வாழ வழி கண்ட
பிணங்கள் சில
பிரிவுகளோடு பிரியாமல், இன்னும் . . .
இக்கவிதையை 'திண்ணையில்' அமர இடம்கொடுத்த திண்ணியர்க்கு தித்திப்பான நன்றி.
2011/1/13 Raman E. Siva
அன்புள்ள நண்பரை வலையில் மீண்டும் சந்திப்பதில் மகிழுவகை அடைகின்றேன் ,
நான் தங்களுடைய blog spot ல் மீண்டும் நுழைந்தேன் தங்களுடைய , மூன்று கவிதைகளை வாசித்தேன் , மிகவும் அருமை அதில் எனக்கு சிலகருத்துக்கள் உண்டு.
நல்ல நட்பை வளர்க்க போற்றுதலும் , புகழுதலும் மட்டும் போதாது குறைகளை சுட்டிக்காட்டுவதும் , போதிய விளக்கம் பெறுவதும் அவசியம் என்பதால் இந்த மின்-கடிதத்தை வரைகின்றேன், முதலில், முதலாளித்துவத்தின் சுறண்டல்.
நண்பேன் . . . ?!? (மற்றும்) பிரியாத பிரிவுகள்
இந்த இரு கவிதைகளில் அளவுக்கு அதிகமான எதுகைகள் , சில இடங்களில் சுவையை குறைக்கிறது . சில இடங்களில் ( இயற்கையாக அமைந்தாலும் கூட) ஒரே எழுத்துகளில் வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்றே சேர்த்து இருப்பதாக தோன்றுகிறது .
இதை தாங்கள் கவனத்தில் கொண்டு , ஆலோசிக்க வேண்டுகிறேன் .
இந்த கவிதைகளில் தங்களுடைய நிலைபாட்டையும், அறிய ஆவல் கொள்கிறேன் .
இப்படிக்கு , தங்கள் "ப்ளாக்" கில் புதிய படைப்புகளை எதிர் நோக்கும் .
வாசகன்
E . சிவராமன்
மதுரை
- - - - - -
அன்பின் சிவராமன்,
தொடர்ந்த வருகைக்கும், கருத்தாய்வுக்கும் மிக்க நன்றி,
மறுபடி எழுதும் பொழுது கவனத்தில் கொள்கின்றேன்,
கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளவும்,
நட்புடன்,
மார்கண்டேயன்.
தொடர்ந்த வருகைக்கும், கருத்தாய்வுக்கும் மிக்க நன்றி,
மறுபடி எழுதும் பொழுது கவனத்தில் கொள்கின்றேன்,
கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளவும்,
நட்புடன்,
மார்கண்டேயன்.
நல்ல கவிதை. மிக வித்தியாசமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஊக்கத்திற்கும், தொடர்ந்த வருகைக்கும் மிக்க நன்றி,
ReplyDeleteபதித்தவுடனே மறுமொழி பெறுவது முதல் முறை என்று நினைக்கின்றேன், சற்று கூடுதல் மகிழ்ச்சி
மிக நல்ல வரிகள்! அருமையான கவிதை! தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!
ReplyDeleteதாலாட்டிய தமிழால் தகை சொல்லும்
ReplyDeleteதம் பெயர் கொண்ட நட்பே
தருகின்றேன் இன்னும்
தமிழ் தாலாட்டித் தந்ததை
தனிச் சிறப்போடு தந்து
தகைமை சேர்ப்போம்
தம்மின் நட்பிற்கு தலை வணங்குகின்றேன்