மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Sunday, December 26, 2010

தாயின் தாயவள்

அவதானிக்க 

  மேலே உள்ள செய்தி படத்திற்கு, தினமலர் நாளிதழ், மதுரை பதிப்பிற்கு விசுவாசம்.

தாயின் தாய் 

தாயின் தாய்
தாய்க்குத் தலை மகள்
தாயின் தாயவள்
தலைமுறை ஐந்து கண்டவள்

தரணி சுற்றி வந்தவள்
தன்னிகரற்று வாழ்ந்தவள்

தன்நெஞ்சு தளராதவள்
தவறிய போது தவறியவள்

. . .

செய்தியறிந்தேன் எம் குரல்
செவிமடுக்க இயலா தூரம் சென்றதை

செய்தொழில் செக்காய் இழுக்க . . . உன்னுடல்
செல்லும் பாதையிலும் . . ..
தொடர்ந்து செல்லமுடியாமல்

. . .

செலவழித்த பின்னுள்ள
சில மணித்துளிகள்
சீராட்டி வளர்த்த ஞாபகம்
சில . . .

ஒரு சேர ஒன்றாய் அமர்ந்த
ஒரு நினைவு

ஒன்பது குழந்தைகளின்
வாரிசுகளை
வாரியணைத்து
வாழ்த்திய தருணங்கள்
பல . . .

ஏனோ ?
இருக்கும் பொழுது
இந்த நினைவுகள்
எங்கேயோ ஒளிந்திருப்பது ?

புரியாத வாழ்க்கை
சுழற்ச்சியில்
புரிபடாமலேயே
நகரும் நாட்களோடு . . .

என்ன இருக்கிறது
என்று தவறாமால்
கேட்கப் பழகி,
என்ன வேண்டும்மென்று
இனி எந்த காலத்திலும் கேட்க முடியாமல்

ஒவ்வொன்றாய்,
உரித்து உரித்துப் பார்க்கின்,
சுடும் உண்மை,

இத்தனையும்
நித்திரை எனும் திரை மறைக்க,
நிகழ்காலத்தின்
இன்னுமொரு நீண்ட பயணம் . . .

இனிமேல் எப்பொழுதாவது
இடிபாடுகளின்
இடைப்பட்ட இதயத்தின் இடத்தில்
இடமிருந்தால் இனிய காலம்
இருநொடியோ இருபது நிமிடமோ
இரண்டு மணி நேரமோ
இரு நாட்களோ
தெரியவில்லை
இனி எப்பொழுதென்று .. .

ஆகச் சிறந்தவனா ?
அளவற்ற ஆற்றல் உடையோனா ?
அன்றாட அகப்படலில் . . .
அடுத்த காலத்திற்காக என்று
அலையும் பொழுதில்
அற்பனாய் . . .
அறிந்த வார்த்தைகளை
அடுக்கி வைத்து
அரும்பொருளை அடிதொழுகின்றேன்
அறம்செய்து ஆற்றல் செய்து
அருள்வளர்க்க
ஆசிர்வதிப்பீர் . . .

ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்ரத்தில் இங்கே 

No comments:

Post a Comment

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது