மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Wednesday, December 8, 2010

புதிய ஆண்டு : நமக்குமா ?

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ௧௬ தேதி, பின்னிரவும் இருள் விலகா நாள் முடியும் நேரத்தில் 'பெருங்கூச்சல்களுடன்' புதிய ஆண்டு பிறந்து விட்டது என்று ஒலி பெருக்கியில் அலறும் பொழுது, பல முறை எதற்கு நமக்கும் இந்த சம்பந்தமில்லாத ஒரு நாளுக்கும் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று கேள்வி எழுந்ததுண்டு,

வயது வளர வளர, கூச்சலிடுபவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது,

கடந்த சில வருடங்களாக, 'கல் தோன்றி முன்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி' என்பது  'குடி' கொண்ட கோமான்களால், கற்காலத்திர்க்கே அழைத்தும் செல்லும் விதமாக மார்கழி ௧௬ மற்றும் ௧௭ அதிகாலை உள்ளது, கடந்த ஆண்டு தவறிய மது வகை இம்முறையாவது மார்கழி ௧௬ ல் குடித்தே தீரவேண்டும் என்று குடியானவர்களின் நோக்கமாக உள்ளது, அது குடிமக்கள் பிரச்சனை.

கிரிகோரியன் நாட்காட்டிப் படி நாட்களை கூட்டி குறைத்து கழித்து, மேலை நாட்டினர் அவர்களின் குளிர் காலம், பனி பொழியும் மாதம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, மார்கழி ௧௦ அவர்களின் பண்டிகை முடிந்தவுடன் மார்கழி பதினாறாம் தேடி ஆண்டின் புதிய நாளாக அறிவித்திருக்கிறார்கள்,

அது தான் நானூறு வருடத்திருக்கு மேல் அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து விட்டோமே, இன்னும் ஏன் நம்மால் நமக்கென்று இருக்கும் புதிய ஆண்டு கணக்கினை அறிய தேடிக்கொண்டிருந்த போது சில வருடங்களுக்கு முன் வந்த மின்னஞ்சல் நினைவுக்கு வந்தது.

அப்படங்களை, இங்கு பதிவிட்டிருக்கின்றேன், இப்படத்தினை உருவாக்கியது நானல்ல, ஆனால் பாரத தீபகற்ப பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளிலும், தெற்காசிய நாடுகளிலும் புதிய ஆண்டு ஏன் சித்திரை மாதத்தையொட்டி வருகிறது என்பதற்கான விளக்கம் உள்ளது:
மேற்சொன்ன விளக்கம் விஞ்ஞான பூர்வமாக உள்ளது,

இதனைப் அறிந்த பின்பும், மார்கழி ௧௬ மற்றும் ௧௭ தேதிகளில் கூச்சல் தொடர்வதோ இல்லை நிறுத்துவதோ தனி மனித உரிமை,

இப்படங்களின் ஒருங்கிணைந்த இலகு படிவ வடிவ (PDF - Portable Document  Format) கோப்பை (File) உருவாக்கியுள்ளேன், பின்னூட்டத்தில் கூகிள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் அனுப்புகின்றேன்.

இப்பதிவினை பலருக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன், அதிலிருந்து பெற்ற ஒரு கருத்துக் கோப்பு (கடிதம்), கீழே கொடுத்துள்ளேன்.

2011/1/3 sivaji sivaji.E.Raman., . . . . @gmail.com>
அன்புடைய நண்பர்,
திரு . ஸுரேஷ்குமார் மார்கண்டேயன் அவர்களுக்கு,

                    நான் எனது நண்பர் தங்கள் வீட்டில் வாடகைக்கு குடிஇருக்கும்
திரு. ராம்குமார்,அவர்கள் மூலமாக எனது அறிமுக வணக்கத்தை  தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது நண்பர் திரு. ராம்குமார், தங்களுடைய மின் அஞ்சலை படித்துவிட்டு எனக்கும் பரிந்துரை செய்தார், நானும் ஏனோ தானோ என்றுதான் படித்தேன். (http://markandaysureshkumar.blogspot.com/2010/12/blog-post.html )

ஆனால், அதில் இருந்த கருத்துகள் வியபூட்டுவதகவும், வினா  கொக்கிகள் போடுவதாகவும், இருந்தது கண்டு வியந்தேன். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை புது நோக்கோடு எண்ணிட வைத்தது.

மதுரை மனமும், தமிழர், சௌராஷ்ட்ரம்  மற்றும் இந்தியர் பழைமை, பெருமைகளையும், விளக்கி வியப்டைய செய்து விட்டீர்கள். படமும், கருதும் பலத்த சிந்தனையை தூண்டிவிட்டது.

நீங்கள் உங்கள் பாட்டிக்கு, விடுத்துள்ள இரங்கல் கவிதையும் ,
தமிழ் மணம் உடையதாகவும் , பிறர் மணம் தொடுவதாகவும், உள்ளது.

இப்படிக்கு,
E . சிவராமன்
மதுரை-1
வாழ்க வையம் ! வளர்க இந்தியர் தம்பெருமை !

- - - - - - 

திரு. சிவராமன் அவர்களுக்கு,

பலருக்கு மின்னஞ்சல் அனுப்பியதில், பார்வை மட்டும்மல்லாது, தங்களின் பரந்த, படர்ந்த சிந்தனைகளை மின்னஞ்சல் மூலம் படிக்கும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி,

நம் பாரம்பரியமே, பன்முக நோக்கில், பல்வேறு கருத்துக்களை ஆய்ந்து அறிந்துகொள்ள வழிவகை உள்ளது தான்,

நடுவில் ஏற்பட்ட முரண்பாடுகள், முடிந்த அளவு பிரிவினை ஏற்படுத்திவிட்டது,

போதாகுறைக்கு,

நானூறுக்கு மேற்பட்ட ஆண்டின் அடிமை வாழ்வின் ருசி, நம்மை சிந்திக்க விடாமலேயே செய்கிறது,

நம் அடிமனதில், இருந்த பாரம்பரிய வேரினை ஆங்கிலேயர், நம்முடையது எதுவுமே சிறந்ததில்லை என்ற சிந்தனையை புகுத்தி அறுத்தெறிந்துவிட்டனர் ,

விளைவு: நம் கண்முன் இருக்கும் நல்ல விஷயங்கள் கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை,

'என்னத்தான் சொல்லு பிரிட்டிஷ் காரேன் காலத்துல கூட சொகமா தான் இருந்தோம்' . . .

போன்ற அங்கலாய்ப்புகள் அழியாமல் தொடர்கிறது,

அவ்வளவே,

இது ஒரு சிறு முயர்ச்சி,

வாழ்த்துகளுடன்,
மார்கண்டேயன்.
- - - - - -

7 comments:

 1. தமிழ் புத்தாண்டுக்கு பின் இருக்கும் விஞ்ஞான பூர்வமாக உண்மையை விளக்கியமைக்கு நன்றி. மேற்கத்திய நாட்டுக் கொள்கை தான் சிறந்து என்று நம்வர்கள் நம்பு வதை உடைக்க. இது போல் பல சொய்திகளை வெளியிட வேண்டுகிறேன்.

  ReplyDelete
 2. Thanks for collecting the valuable information.

  ReplyDelete
 3. அறிவியல்பூர்வமாக நிரூபித்தமைக்கு பாராட்டுக்கள் ..

  ReplyDelete
 4. Thanks a lot for the information.

  ReplyDelete
 5. அருமையான விளக்கங்களை தந்துள்ளீர்கள். உங்கள் பணி மேலும் வளரட்டும்

  ReplyDelete
 6. Keep sending this type of valuable informations.. Thanks..

  ReplyDelete
 7. நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை தொடர்வதில் சிறு வருத்தம் இருப்பினும் மகிழ்ச்சி தான்,

  //தமிழ் . . . வேண்டுகிறேன்.//

  முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குமரன் குமரப்பன்.

  நன்றி பெரி,

  //நிரூபிக்கப்பட்டாலும், மனம் மற்றும் சூழ்நிலை ஏற்க இடம்கொடுப்பதில்லை என்பது தான் உண்மை, செந்தில், அதனால், இருப்பதே தொடர்கிறது.//

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜெயகுமார்.

  //மிக்க மகிழ்ச்சி ஸ்வாமி ஓம்கார்,
  தங்களின் பணியிலும் வருகை புரிந்து கருத்தினை அளித்தமை, நிறைவாக இருக்கிறது. //

  முயற்சிக்கிறேன், ராமியா ஸ்ரீதரன்.

  ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது