மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Friday, February 25, 2011

ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧, ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 2011

பதிவுக்கு போகும் முன்: சிறு வேண்டுகோள் . . .

ஸௌராஷ்ட்ர மொழியில் சில தகவல் உள்ளதால், தயவுசெய்து,

௧. ஸௌராஷ்டிரா (sourashtra) எழுத்துருவி (unicode) வடிவத்தை (font) இங்கிருந்து தரவிறக்கம் (download) செய்து நிர்மாணித்துக் (install) கொள்ளவும்,


௨. பிறகு, இதே வலைப் பக்கத்தை, நெருப்பு ஓநாய் (Fire Fox) இணையப் பார்வையில் (INTERNET BROWSER) நோக்கவும்,
ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ ꢩꢵꢰꢵ ꢒꢭꢵꢯꢵꢭꣁ - ꣒꣐꣑꣑
ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧
ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 2011
 SOURASHTRA LANGUAGE WORKSHOP - 2011
அஸ்கி தெங்கோ நமஸ்கார் ꢂꢱ꣄ꢒꢶ ꢡꢾꢖ꣄ꢒꣁ ꢥꢪꢱ꣄ꢒꢵꢬ꣄, எனும் அனைவருக்கும் வணக்கம், 
ஸௌராஷ்டிர மொழி ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தொன்மையான ப்ராக்ருத (இயல் மொழி அல்லது இயற்கை அமைப்பில் உருவான) மொழியின் ஒரு பிரிவான ஸௌரஸேனியின் இன்றைய வடிவமாகும்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முகலாயர்களின் தொடர்ந்த படையெடுப்புகளால், ஸௌராஷ்டிர தேசமெனும் இன்றைய குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் வாழ்ந்த ஸௌராஷ்டிரர்கள் (ஆய்வில் உள்ள தகவல்), 

சிறிது சிறிதாக புலம் பெயர்ந்து, ஆந்திரம் வந்து, அங்கு விஜய நகரப் பேரரசில் செழுமை பெற்றனர்.
அந்நிகழ்வு, ஸௌராஷ்டிரா விஜயாப்தம், எனும் ஸௌராஷ்டிரர் புதிய ஆண்டுக் கணக்காக கொள்ளப்படுகிறது (ஆய்வில் உள்ள தகவல்).

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்டிருந்தாலும், நெசவுத் தொழிலில் உள்ள தனித் திறமையால் ஆஸ்தான ஆடை நிபுணர்களாக / நெசவாளர்களாக, (ஆய்வில் உள்ள தகவல்) விஜய நகரப் பேரரசின் நியமன நாயக்க மன்னர்களால் தமிழகம் வந்தனர். 

மதுரை மற்றும் பிற பகுதிகளில் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்து வருகின்றார்கள். 

தாய் மொழி ஸௌராஷ்ட்ரம் எனினும், பல்வேறு பிராந்திய மொழிகளான தெலுங்கு, வடமொழி, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவைகளில் சிறந்த புலமை பெற்றனர். 

(இது பற்றி தனி பதிவாக எழுத உள்ளதால், பின்னர் விரிவாக விவரிக்கின்றேன்) 

காப்பியங்களை பல்வேறு எழுத்துக்களில் எழுதினர். 

இந்நிலையில் சுமார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஸௌராஷ்டிரா மொழிக்கென எழுத்துக்கள் உருவாக்க வேண்டுமென்ற உந்துதலில், இடைவிடா முயற்சியில், சீரான ஆராய்ச்சியில், 

வரகவி வேங்கடசூரி, பண்டித சதுர் வேதி லக்ஷ்மனாச்சார்யா, ராமாராய் ஆகியோரின் ஐம்பது வருட உழைப்பின் பயனாய், 

ஸௌராஷ்டிரா மொழிக்கு தனி சிறப்பு வாய்ந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டது. 
பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படாததாலும், தாய் மொழி எழுதிப் பழக வேண்டிய தேவையற்ற, அவசியமற்ற தன்மையாலும், சுமார் ஐம்பது ஆண்டு காலமாக ஸௌராஷ்டிரா மொழி சிறிது சிறிதாக தேய்ந்து வருகிறது.

சமீப கால கணினி வளர்ச்சியினாலும், 2008 ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வந்த ஆய்வின் மூலமும், ஸௌராஷ்டிரா மொழி எழுதிப் பழக மிக எளிய முறை வடிவமைக்கப்படுள்ளது. 

முதல் முயற்சியாக கடந்த ஜனவரி 29 ம் தேதி, கோழிகோடில் ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௬௯௮.௧ (698.1) எனும் ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 698.1, மேற்கொள்ளப்பட்டது.
அவ்வயமத்தில், இருபத்தி ஐந்து பேர், ஒரு மணி நேரத்தில் ஸௌராஷ்டிரா மொழி (நிற்க: தாய் மொழி ஸௌராஷ்டிரமாக கொண்டவர்கள்) எழுதுவதில் தேர்ச்சி பெற்றனர். 

இம்முயற்சிக்கு அனைத்து வசதிகளும் (நான்கு நட்சத்திர உணவகத்தில் உள்ள அறை, உணவு, இருப்பிடம், போக்குவரத்து) ஏற்படுத்தி கொடுத்து, எங்களின் முதல் முயற்சியே முழு வெற்றி பெறச் செய்தமைக்கு, திரு. நிரஞ்ஜன்குமார், திருமதி. ஸ்ரீ தேவி நிரஞ்ஜன்குமார், அன்புச் செல்வங்கள் சஞ்சனி மாய்,   அமர்சந்த் பபு, கிஷன் மாதவ் பபு, ஆகியோருக்கு  எங்களின் நெஞ்சார்ந்த நன்றி. இதைத் தவிர வேறென்ன சொல்ல,

மாய் - தங்கை, பபு - தம்பி,

இங்கு தான் முதல் முறையாக நன்றி என்ற வார்த்தைகளை எழுதுகின்றேன், 

திரு. நிரஞ்சன் அவர்களிடம் விடை பெறும் போது அவரிடம் சொன்ன ஒரே வார்த்தை, 

"உங்களுக்கு நன்றி சொல்லி முடித்துக் கொள்வதை விட, இதே போன்ற ஒரு பட்டறையை நடத்தி அங்கு உங்களுக்கு நன்றி சொன்னால் தான் தகும்" என்று விடை பெற்றேன்,  
இன்று அதற்கான தருணம் இறையருளாலும், நான் பயின்ற ஸௌராஷ்டிரா கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் ஆசிர்வாதத்தினாலும், அமைந்துள்ளது.

ஆம் நண்பர்களே, 

வரும் மார்ச் மாதம் 17 மற்றும் 18 ம் தேதிகளில், ஸௌராஷ்டிரா கல்லூரி, மதுரையில்,


ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ ꢩꢵꢰꢵ ꢒꢭꢵꢯꢵꢭꣁ - ꣒꣐꣑꣑
ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧
ஸௌராஷ்டிரா மொழி பட்டறை -   2011
 SOURASHTRA LANGUAGE WORKSHOP - 2011
 நடைபெற உள்ளது, 
அனைவரும் பங்கெடுத்து இம்முயற்சி  வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

மேலதிக தகவல் கீழே: 
Place :

Sourashtra College,
Madurai - 625 004,
Bhaarada Kutumbakam (India)

Date :

March 17 & 18, 2011 (Two Days),

Course Fee : Rs. 100 /-
(Payment has to be made in CASH only during the Workshop days)

Last date for Registration : March 14, 2011.

As this programme is open to all, interested candidates (irrespective of age, academic qualification, professional background, etc.,) are invited to participate and learn writing in Sourashtra Language,

Certificate will be issued to all the participants,

Contact details :

M.S. Sureshkumar,
Administrator,
Vishwa Sourashtram - First International Journal in Sourashtra Language,
http://Sourashtra.info

E. Mail : kalaashaalo@sourashtra.info

Ph.: +91-81445 83647
தங்களின் மேலான அன்பையும் ஆதரவினையும் எதிர்நோக்கியிருக்கும், 
மார்கண்டேயன்.  

இந்த விவரம் பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், கேட்டுக்கொண்டர்க்கிணங்க, தங்களின் பதிவுகளில் பகிர்ந்துகொண்ட பதிவர்கள் khenikeri ꢓꢾꢥꢶꢒꢾꢬꢶஎனும் கதைசொல்லி, இட்லிவடை, கூடல் குமரன், கே.ஆர்.பி. செந்தில், நிகழ்வுகள் சிவமுருகன் மற்றும் ஜாக்கி சேகர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி. 

16 comments:

 1. பட்டறை வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. Best wishes for this workshop... to develop the language....

  ReplyDelete
 3. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

  ReplyDelete
 4. அஸ்கி தெங்கோ நமஸ்கார் ..... மொழி வளர சேவை செய்யும் சௌராஷ்டிர அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. worshop chokkaD chalattak nandininu!
  K.V.Pathy

  ReplyDelete
 6. நல்ல முயற்சி. மதுரை வரும் சமயம் நான் தங்களைச் சந்திக்க முயற்சி செய்கிறேன். நன்றி.

  ReplyDelete
 7. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. wben want to develop a language letters is essential so i appreciate this action

  ReplyDelete
 9. ராமகிருஷ்ண ஜோசியர் அவ்ரதெனுங்க்யா? வேன் சொந்தோஷ்

  ReplyDelete
 10. எனது அன்புக்குரியவளின் மொழி சௌராஷ்டிரா. அவள் மொழி எழுத்து வடிவமில்லாத மொழி என்று, நான் அடிக்கடி கிண்டலும் கேலியும் செய்வதுண்டு. உங்கள் தளத்தில் சௌராஷ்டிர மொழியின் சிறப்பறிந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். தொடரட்டும் உங்கள் பணி.

  குகன்

  ReplyDelete
 11. இன்னும் தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. எனது அன்புத்தோழியின் மொழி... எனக்கு சௌராஷ்ட்ர மொழி அந்த உச்சரிப்புகள் மிகவும் பிடிக்கும். வல்லினம் அதிகம் இல்லாத மொழிபோன்று மிக மெல்லிய நல்ல மொழி., நிச்சயம் வளரும்..., வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. நல்ல முயற்சி.வெற்றிபெற வாழ்த்துக்கள்.நானும் பதிவிடுகிறேன்.முகநூல்,கூகிள் பஸ்ஸிலும் ஏற்றிவிடுகிறேன்.என் உயிர் நண்பன் தஞ்சாவூர் வண்டிக்காரர் தெருவை சார்ந்த ராஜாகுமார்காக.நன்றி

  ReplyDelete
 14. வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
  http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_17.html

  ReplyDelete
 15. தங்கள் முயற்சியைக் கண்டு ஒரு சௌராஷ்டிரானனாக பெரிதும் மகிழ்கின்றேன்.
  வாழ்த்துகள்.

  sattaparvai.blogspot.com
  jayarajanpr.blogspot.com

  ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது