மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Saturday, January 15, 2011

உத்தராயண புண்ய காலம் மகர சங்கராந்தி பொங்கல் திருநாள் வாழ்த்துகள்,

பதிவுக்கு போகும் முன்: சிறு வேண்டுகோள் . . .

ஸௌராஷ்ட்ர மொழியில் வாழ்த்துகள் உள்ளதால், தயவுசெய்து,

௧. ஸௌராஷ்டிரா (sourashtra) எழுத்துருவி (unicode) வடிவத்தை (font) இங்கிருந்து தரவிறக்கம் (download) செய்து நிர்மாணித்துக் (install) கொள்ளவும்,

௨. பிறகு, இதே வலைப் பக்கத்தை, நெருப்பு ஓநாய் (Fire Fox) இணையப் பார்வையில் நோக்கவும்,

ꢂꢱ꣄ꢒꢶ ꢡꢾꢖ꣄ꢒꣁ ꢆꢡ꣄ꢡꢬꢵꢫꢠ ꢦꢸꢥ꣄ꢫ꣄ ꢒꢵꢭꢪ꣄ ꢪꢒꢬ ꢱꢖ꣄ꢒ꣄ꢬꢵꢥ꣄ꢡꢶ ꢦꣁꢖ꣄ꢔꢭ꣄ ꢮꢶꢯꢾꢰꢸꢥꢸꢒꢸ ꢪꣁꢥ꣄ꢥꢸ ꢩꣁꢬꢾ ꢮꢶꢱ꣄ꢮꢵꢱ꣄ ꢪꢾꢥ꣄ꢭꢬꢾꢱꢶ 

அஸ்கி தெங்கோ உத்தராயண புண்ய காலம் மகர சங்கராந்தி, பொங்கல், விஷேஷுனுகு மொன்னு (bhore) பொரெ விஸ்வாஸ் மென்லரேசி,

அனைவருக்கும் உத்தரயான புண்ய காலம் மகர சங்கராந்தி, பொங்கல் நல்வாழ்த்துகள் என்பதன் அர்த்தம் தான் மேலே உள்ளது,

இந்த இனிய நாளில்,

இவ்வலையகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நல்லிதயங்கள் செந்தில், ரகு, ஈஸ்வரி, கமலேஷ், தனி காட்டு ராஜா, அ(ட)ப்பாவி, அருண் பிரசாத், பிரசன்னா, எஸ் கேவீரகுமார், சிவகுமார், அருண் பிரசாத் ஜெ, கவியின் கவிகள், ரிஷபன் மீனா, ஸ்ரீ, குமரன் ராமு, சுந்தர்,

அனைவருக்கும் மனதர்க்கினிய நன்றி,

இவை மட்டும்மல்லாமல், இங்கிருப்பவைகளை பகிர்ந்து கொள்ள பாலமாய் இருக்கும், சௌராஷ்டிரா வொலா gher எனும் ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬꢵ ꢮꣁꢭꢵ ꢕꢿꢬ꣄ ஸௌராஷ்ட்ர இணைய இல்லம், ஸௌராஷ்டிரா கூகிள் வொலா கும்பு ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬꢵ ꢔꢹꢔꢶꢭ꣄ ꢮꣁꢭꢵ ꢔꢸꢪ꣄ꢦꢸ எனும் ஸௌ ராஷ்டிரா கூகிள் இணைய குழு, பாலை பல்கார்ஸ் கூகிள் வொலா கும்பு ꢦꢵꢭꣀ ꢦꢭꢒꢵꢬ꣄ꢱ꣄ ꢔꣂꢔꢶꢭ꣄ ꢮꣁꢭꢵ ꢔꢸꢪ꣄ꢦꢸ எனும் பாளையங்கோட்டை ஸௌராஷ்ட்ரர் கூகுகில் இணைய குழு,  , இந்திய தொழில் நுட்பக்கழகம், கடக்பூர், யாஹூ தமிழர் குழு, மற்றும் மின் மடலாடற் குழு,

ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி,


தன் கருத்துக்களையும், கருத்தாய்வினையும் தரும் திரு. சிவராமன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி,

சிறு குறிப்பு நண்பரே:

இந்த இணைய பெருவெளியில், சிறு துளியினும் துளி தான் இந்தப் பதிவு, நீங்கள் குறிப்பிடும் உயரத்தில் நான் இல்லை, 

எழுத்தாளனும் அல்ல, இங்கே பதிகின்ற விஷயங்கள் மூலம் இதயங்களை இணைக்கும் முயற்சி அவ்வளவே,

அதனால், எழுத்தாளன், வாசகன் என்ற பிரிவை விட, ஒத்த கருத்துடையவர், சிந்தனையுடையவர் என்று இருப்பது நல்லது,

உங்களிடம் இருந்தும் படைப்புகளை எதிர் நோக்கியிருக்கின்றேன்,

எங்கோ ஒரு ஓரத்தில் இருந்த என்னை வெளிச்சம் காட்டியவர்கள் மேற் சொன்னவர்கள் தான்,

அதில் சிறப்பிடம், பதிவர் இட்லிவடை அவர்களைச் சாரும், அவர் தான் என்னுடைய 'சிறப்பு அடையாள அட்டை பதிவின் தொடர்பை தன் வலையுலகில் கொடுத்து, பலரை சென்றடையச் செய்தவர்,

மேலும், பலரை அந்தப் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்,

சுருங்கக் கூறின், கீழே உள்ள இந்த வரி போலத் தான்,

என்னுடைய இருப்பு,

மேலே சொன்னவர்களால் தான்,

உயிர்ப்பு,

இந்தப் பொங்கல் நாளில் பொங்கட்டும் பொலிவான சிந்தனை,


நன்றி,
மார்கண்டேயன்.