மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Thursday, April 7, 2011

ஸௌராஷ்ட்ர மொழி கற்க

ஸௌராஷ்டிரா . . . ,

இச்சொல்லை பலர் அறிந்திருந்தாலும், அதன் முழு விவரம் பலருக்கு தெரிவதில்லை,

ஸௌராஷ்டிரா  என்பது பண்டைய காலத்தில் இருந்த பாரத வட மேற்கு பகுதியில் இருந்து (தற்போதைய குஜராத்) புலம் பெயர்ந்து, தமிழ்நாட்டில் பெருவாரியாகவும், இன்று உலகெங்கும் இருக்கும் ஒரு சமூகத்தினரை குறிக்கும் சொல்.

பல்வேறு தொழில்களை நுணுக்கம் பெற்றிருந்தாலும், நெசவுத் தொழிலில் உள்ள தனித் தன்மையினால், பட்டுநூல்காரர் என்று அழைக்கப்படுகிறார்கள்,

ஸௌராஷ்ட்ர தேசத்தை பிரிந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலானாலும், ஸௌராஷ்ட்ர மொழியை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறாகள்.

வாழ்வாதாரத்திர்க்காக பிராந்திய மொழிகளைக் கற்க வேண்டிய அவசியம் இருந்ததால், பல்வேறு பிராந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், இண்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றனர்,

அதே நேரத்தில், தங்களின் தாய் மொழியான ஸௌராஷ்டிரத்தில் போதிய தேர்ச்சி இல்லை, ஏனெனில் அதற்க்கான வாய்ப்புகள் இல்லை.

ஆனால், இன்றைய இணைய வளர்ச்சி மூலம், ஸௌராஷ்ட்ர ஒருங்குறி (Unicode) அமைக்கப்பட்டு, இணையத்திலும், மின்னஞ்சலிலும் ஸௌராஷ்ட்ர மொழியில் எழுதுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலருடைய விருப்பம் யாதெனில், பெருவாரியான இணைய பயனரகளுக்காகவாவது ஸௌராஷ்ட்ர மொழி இணைய வழியில் கற்பதற்கு ஒரு வலைத்தளம் வேண்டும் என்பதே,

கடந்த மூன்று மாத இடைவிடா சோதனைகளுக்கு பிறகு ஸௌராஷ்ட்ர மொழி கற்க ஒரு வலைத்தளம் செயல்படுத்தப் பட்டுள்ளது,

இணைய தளத்திற்கு செல்லும் முன்,

தயவுசெய்து,

௧. ஸௌராஷ்டிரா (sourashtra) எழுத்துருவி (unicode) வடிவத்தை (font) இங்கிருந்து தரவிறக்கம் (download) செய்து நிர்மாணித்துக் (install) கொள்ளவும்,

௨. பிறகு, இதே வலைப் பக்கத்தை, நெருப்பு ஓநாய் (Fire Fox) இணையப் பார்வையில் நோக்கவும்,

மேற்சொன்ன ஆயத்தங்கள் செய்ததற்கு மிக்க நன்றி,

ஸௌராஷ்ட்ர மொழி கற்க உங்களை பின்வரும் வலைத்தளத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்,

வருக ! வருக ! ஸௌராஷ்ட்ரம் கற்க ! ஸௌந்தர்யம் பெறுக !




இங்கே வரவும்

இப்பதிவு பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பதிவர் திரு. இட்லி வடை அவர்களிடம் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க, அவர் தன் வலையகத்தில், இப்பதிவிற்கான இணைப்பினை கொடுத்துள்ளார்கள்,

ஸௌராஷ்ட்ர மொழி வளர்ச்சிப் பணிகளுக்கு, பதிவர் இட்லி வடை அவர்கள் தரும் ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்கும் உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.


நன்றியுடன்,
மார்கண்டேயன்

இயற்கையின் இறை

இயற்கையின் இறை 

இரு வருடங்களுக்கு முன், தென் ஐரோப்பாவிலிருந்து வட ஐரோப்பா சென்ற பொழுது வானூர்தியிலிரிந்து எடுத்த சில படங்களை பகிர்ந்து கொள்கின்றேன்: 

வரவேற்புரை: 

இவ்வலையகத்திற்கு வந்திருக்கும் புதிய வரவுகளான, கோபி ராமமூர்த்தி, கீர்த்திகா ராகவன், பாப்பி, சாம் டேவிட் தனபால், தோழி, மயில் ராவணன், ராஜேஸ்வரி, நிர்மல் பாபு ஆகியோரை வருக வருக என அன்போடு அழைக்கின்றேன்.

இனி படங்கள் :







கடைசி படம் தான் மிக பிடித்தது, 

ஏனெனில், சிறு வயதில் திரைப் படங்களில் மேலுலகத்தை குறிப்பதற்கு, மேகத்தினாலான தரையை காண்பிப்பார்கள், 

அதே போல ஒரு அமைப்பு அரிதாக வாய்த்தது,

வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி.